இந்தியாவில் உற்பத்தி செய்தும் இப்படியா..ஆப்பிள் நிறுவனத்தால் இந்தியாவுக்கு பலன் தான்!

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் ஆன ஆப்பிள் ஐபோன் என்பதே பல இளைஞர்களின் கனவாக இருக்கும். ஸ்மார்ட்போன் என்பது இன்று பற்பல பிராண்டுகளில் வலம் வந்து கொண்டிருந்தாலும், மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றிருப்பது ஆப்பிள் ஐபோன்கள் தான்.

இது விலையில் மட்டும் அல்ல, தொழில் நுட்பத்திலும் உயர்ந்த ஒன்றாக இருந்து வருகின்றது.

அப்படிப்பட்ட ஐபோனின் 14 சீரிஸ்களை மட்டும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து வருகின்றது.

சப்ளை பற்றாக்குறை

சப்ளை பற்றாக்குறை

இந்தியாவில் உற்பத்தியினை தொடங்கியிருந்தாலும், இந்த காலக்கட்டத்திலும் ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்படியிருந்தாலும் தற்போது வரையிலும் ஐபோன் 14 ப்ரோவின் சப்ளையில் பற்றாக்குறையே இருந்து வருவதாக தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆப்பிளுடன் பேச்சு வார்த்தை

ஆப்பிளுடன் பேச்சு வார்த்தை

ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் சப்ளையில் பாதிப்பினை எதிர்கொண்டு வருவதாகவும், இப்பிரச்சனை குறித்து ஆப்பிள் நிறுவனம் ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர மாற்று வழியினை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து தான் ஆப்பிள் நிறுவனத்துடன் பேசியதாகவும் கூறியுள்ளார்.

உற்பத்தியுடன் இறக்குமதியும்

உற்பத்தியுடன் இறக்குமதியும்

இது குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜீவ், நான் ஆப்பிள் நிறுவனத்துடன் பேசினேன். இந்தியாவில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஐபோன் 14 ப்ரோவுக்கான தேவையானது அதிகரித்துள்ளது. எனினும் இறக்குமதியும் செய்யப்பட்டு வருகின்றது. ஆனாலும் சப்ளையில் பிரச்சனை இருந்து வருவதால், பற்றாக்குறை இருந்து வருகின்றது என தெரிவித்துள்ளார்.

4 வாரங்கள் ஆகும்

4 வாரங்கள் ஆகும்

பிளிப்கார்டில் ஐபோன் 14 ப்ரோ 128ஜிபி மாடல் போன் முதல் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1 TB மாடல் வரையில் SOLD OUT அல்லது விரைவில் வரும் என உள்ளது. இதில் சில கலர்கள் மட்டுமே Available என காணப்படுகின்றது. இதே அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஐபோன் 14 ப்ரோ கிடைக்க 4 வாரங்கள் வரையில் காத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் பற்றாக்குறை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தி அதிகம் இல்லை

உற்பத்தி அதிகம் இல்லை


ஆப்பிள் நிறுவனம் தற்போது ஐபோன் 14 மாடலை மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்து வருகின்றது. எனினும் அதன் முழுமையான உற்பத்தியானது இந்தியாவில் மட்டும் உற்பத்தி செய்யப்படவில்லை. இங்கு தேவையுள்ள அளவுக்கு கூட உற்பத்தி செய்யப்படவில்லை என்பதே இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது.

என்ன ஸ்பெஷல் தெரியுமா?

என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ கிராஸ் டிடெக்ஷன் என்ற நவீன தொழில் நுட்ப வசதியினை கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இது போன் வைத்திருக்கும் பயனாளர் திடீரென ஏதேனும் விபத்தில் சிக்கிக் கொண்டால், அவரால் பேச முடியாத சமயத்தில் கூட அவசர உதவிக்கு தானாக தகவல் தெரிவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோனின் இந்த பயனால், இந்த மாடல் மக்கள் மத்தியில் தொடர்ந்து ஆர்வத்தினை ஏற்படுத்தி வருகின்றது.

இந்தியாவில் உற்பத்தி அதிகரிக்க வேண்டும்

இந்தியாவில் உற்பத்தி அதிகரிக்க வேண்டும்

இதற்கிடையில் தான் இந்தியாவிலும் அதன் தேவையானது அதிகளவில் இருந்து வருகின்றது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தியினை அதிகரிக்க வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து சர்வதேச அளவில் இந்தியா மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இருந்து வரும் நிலையில், அவற்றின் உற்பத்தியினை பெருக்குவது, சர்வதேச நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதேசமயம் இந்தியர்களுக்கும் வேலை வாய்ப்பினை கூட்டலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+