ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 மாடலை அறிமுகப்படுத்தியதில் இருந்து பல்வேறு ஈ-காமர்ஸ் தளங்களும், இதற்கு முன்பு வெளியான பிற ஐபோன் மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கி வருகிறது. அந்த வகையில் பிளிப்கார்ட் நிறுவனம் ஐபோன் 15-ஐ பிக் தீபாவளி விற்பனையின் காரணமாக 25,649 ரூபாய்க்கு வழங்குகிறது. நீங்கள் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேசை தவறவிட்டிருந்தால் தள்ளுபடி விலையில் ஐபோன் 15 வாங்குவதற்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
கூடுதலாக இந்த இ-காமர்ஸ் தளம் 10 நிமிடங்களில் ஐபோன் 15-ஐ உங்கள் வீட்டிற்கு டோர் டெலிவரி செய்கிறது. பிளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் ஐபோன் 15-ஐ எப்படி பெறுவது? என்பதைப் பார்ப்போம்.

ஐபோன் 15-இன் 128 ஜிபி மாடல் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.56,599-க்கு கிடைக்கிறது. இதற்கு பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.3,750 வங்கி தள்ளுபடியை வழங்குகிறது. இதனால் ஐபோன் 15-இன் விலை ரூ.52,849 ரூபாயாக குறையும். மேலும் பிளிப்கார்ட்டில் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ஐபோன் 15-ஐ வாங்குபவர்கள் கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். உதாரணமாக உங்களிடம் ஐபோன் 14 இருந்தால் நீங்கள் ரூ.27,200 வரை தள்ளுபடி பெறலாம்/ இதன் காரணமாக ஐபோனின் விலை ரூ.25,649-ஆகக் குறையும்.
10 நிமிடங்களில் டெலிவரி: நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஐபோன் 15 மாடலை பிளிப்கார்ட் நிறுவனம் 10 நிமிடங்களில் உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்கிறது. உதாரணமாக கருப்பு நிறம், நீல நிறம் மற்றும் இளஞ்சிவப்பு போன்ற நிறங்களை கொண்ட மாடல்களை 10 நிமிடங்களில் வீட்டிலிருந்தே நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
ஐபோன் 15 ஆனது ப்ரோ மோஷன் (ProMotion) தொழில்நுட்பத்துடன் கூடிய 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz வரை புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது. இது கேமிங் முதல் தினசரி ஸ்க்ரோலிங் வரை அனைத்திற்கும் ஏற்ற மொபைலாகும்.
A16 பயோனிக் சிப் பொருத்தப்பட்ட, ஐபோன் 15 சிறந்த செயல்திறனை வழங்குகிறது. இது மிகவும் தேவைப்படும் பணிகளைக் கூட எளிதாகக் கையாளும் திறன் கொண்டது. பின்புற கேமரா அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது, புதிய 48MP கேமரா, புகைப்படம் மற்றும் வீடியோ தரத்தை மேம்படுத்துகிறது. இதனால் குறைந்த வெளிச்சத்திலும் போட்டோக்களை எடுக்க முடியும்.
பேட்டரி மற்றும் கூடுதல் அம்சங்கள்: ஐபோன் 15 நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரியுடன் வருகிறது. இதனால் நாள் முழுவதும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications