ஆப்பிள் தனது புதிய ஐபோன்களை செப்டம்பர் 12 ஆம் தேதி வொண்டர்லஸ்ட் நிகழ்வில் அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு ஐபோன் நிகழ்வைப் போலவே, இந்த ஆண்டும் வதந்திகளுக்கு பஞ்சமில்லாமல் .
ஐபோன் 15 சீரியஸ் பெரும்பாலான புதிய அம்சங்கள் கசிந்துள்ளன, ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கும், விலை அறிவிப்புக்காகவும் நாம் காத்திருக்க வேண்டியது கட்டாயம். புதிய ஐபோன் 15 விலை நிர்ணயம் செய்யும்போது நல்ல செய்தி மற்றும் கெட்ட செய்தி இரண்டும் உண்டு. தற்போது சந்தையில் வரவிருக்கும் iPhone 15 சீரியஸ் போன்களின் விலை கணிப்புகள் என்ன.. ?

முந்தைய ஐபோன்களைப் போலவே, இரண்டு நிலையான ஐபோன் மாடல்களையும் இரண்டு ப்ரோ மாடல்களை வெளியாவது கிட்டத்தட்ட 90 சதவீதம் உறுதி. அவை ப்ரோ அல்லாத மாடல்களுடன் ஒப்பிடும்போது ப்ரோ மாடல்கள் வழக்கம் போல் பிரீமியம் விலையில் விற்கப்படும்.
ஆப்பிள் நான்கு புதிய மாடல்களை வெளியிட உள்ளது: iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, iPhone 15 Pro Max. iPhone 15 மற்றும் iPhone 15 Plus எதிர்பார்க்கப்படும் விலை அளவுகளில் முதலில் நல்ல செய்தியுடன் தொடங்குவோம்.
ஆப்பிள் கடந்த ஆண்டின் ப்ரோ அல்லாத மாடல்களின் விலையை இந்த ஆண்டு எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த போன்கள் அமெரிக்காவில் $999 விலையில் தொடங்குகிறது. இந்தியாவில் வாங்குபவர்களுக்கு, அடிப்படை மாடலின் ஆரம்ப விலை ரூ.79,900 ஆக நிர்ணயிக்கப்பட்டது. புதிய ஐபோன் 15 பிளஸ் ரூ.89,900 விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 15 நிலையான மாடல்கள் சில குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் 15 போனில் ஐபோன் எக்ஸ் சீரியஸ் போனில் காலம் காலமாக இருந்து வரும் நாட்ச் நீக்கப்பட்டு அனைத்து போன்களிலும் கடந்த ஆண்டு மாடலில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட டைனமிக் ஐலேண்டு மூலம் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு யூசரின் ஸ்கிரீன் ரியல் எஸ்டேட்டை அதிகரிக்கும். பிளேசர் அளவும் ஐபோன் 15 மாடல் போனில் மெலிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு வதந்தி என்னவென்றால், ஆப்பிள் முதன்மை கேமராவை 12 MP இலிருந்து 48MP ஆக மேம்படுத்தும்.
ஐபோன் 15 இப்போது A16 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படும். இது கடந்த ஆண்டு ப்ரோ மாடல்களை இயக்குகிறது. புரோ மற்றும் ப்ரோ அல்லாத இரண்டு மாடல்களும் மின்னல் கேபிளுக்கு பதிலாக USB டைப்-சி போர்ட்டைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
iPhone 15 Pro iPhone 15 Pro மேக்ஸ் எதிர்பார்க்கப்படும் விலை: ப்ரோ மாடல்கள் சில பெரிய மேம்படுத்தல்களைப் பெறுகின்றன, இதனால் கடந்த ப்ரோ மாடல்களை காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும். ஐபோன் 15 ப்ரோ 100 டாலர் அதிக விலைக்கு விற்கப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
கடந்த ஆண்டு, ஐபோன் 14 ப்ரோ அமெரிக்காவில் $999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த ஆண்டு, அந்த விலை $1099 ஆக உயரக்கூடும். இந்தியாவில் ஐபோன் 14 ப்ரோ ரூ.1,29,900க்கு கிடைத்தது. இந்தியாவில் வாங்குபவர்கள் குறைந்தபட்சம் ரூ.10,000 விலை உயர்வை எதிர்பார்க்கலாம்.
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இன்னும் பெரிய விலை உயர்வைப் பெறும். ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை $200 கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வெளியீட்டு விலை $1299 ஆக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications