டெக் உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16, ஏர்பாட்ஸ், வாட்ச் ஆகியவை நேற்று இரவு அமெரிக்க நேரத்தில் வெளியானது. ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் குறித்து ஆரம்பக்கட்ட இம்பிரஷனில் சில விமர்சனங்கள் இருந்தாலும் தொழில்நுட்பத்திலும், விலையிலும் செய்யப்பட்ட மாற்றங்கள் மக்களை கவர்ந்துள்ளது என்றால் மிகையில்லை.
இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16, ஏர்பாட்ஸ், வாட்ச் ஆகியவை அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு வரும் வேளையில் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் எதிர்பார்க்கும் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

ஐபோன் 16, ஐபோன் Plus, ஐபோன் Pro மற்றும் ஐபோன்Pro Max விலை: ஐபோன் 16-ன் அடிப்படை விலை $799 (சுமார் ரூ.67,000) ஆகும், அதேசமையில் ஐபோன் 16 Plus-ன் விலை $899 (சுமார் ரூ.75,500) ஆகும். ஐபோன் 16 Pro-ன் விலை 128GB-க்கு $999 (சுமார் ரூ.83,870) மற்றும் 256GB-க்கு $1199 (சுமார் ரூ.1 லட்சம்) ஆகும். இந்த விலைகள் அமெரிக்க சந்தைக்கானவை.
இந்தியாவில், ஐபோன் 16-ன் விலை ரூ.79,900 ஆகவும், ஐபோன் 16 Plus-ன் விலை ரூ.89,900 ஆகவும் இருக்கும். ஐபோன் 16 Pro-ன் அடிப்படை விலை இந்தியாவில் ரூ.1,19,900 ஆகும். மிகவும் உயர்ந்த ஐபோன் 16 Pro Max-ன் விலை இந்திய சந்தையில் ரூ.1,44,900 ஆகும்.
ஐபோன் 16-க்கான முன்பதிவு இந்தியாவில் செப்டம்பர் 13, மாலை 5:30 மணிக்கு தொடங்குகிறது. முதல் விற்பனை செப்டம்பர் 20 அன்று நடைபெறும். ஐபோன் 16 பிளிப்கார்ட், அமேசான், ஆப்பிள் ஸ்டோர், மற்றும் பிற தளங்கள் மூலம் விற்பனைக்கு வரும்.
ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ்: ஆப்பிள் நிறுவனம் நேற்று தனது ஐபோன் அறிமுகம் செய்ததோடு புதிதாக ஸ்மார்ட்வாட்ச் சீரிஸ்-ம் அறிமுகம் செய்தது. நேற்று புதிய Apple Watch Series 10 மற்றும் Apple Watch Ultra 2 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனுடன் புதிய வண்ணங்களில் AirPods 4 மற்றும் AirPods Max மற்றும் USB-C சார்ஜிங் அம்சத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை நிலவரத்தையும் இப்போது பார்ப்போம்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10: ஆப்பிளின் புதிய Apple Watch Series 10 இந்தியாவில் ரூ.46,900 என்ற தொடக்க விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களுடன் ஒப்பிடுகையில், இந்த வாட்ச் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் வடிவமைப்பைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2: ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரீமியம் வாட்ச்சான Apple Watch Ultra 2, புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் அமெரிக்க விலை $799 (சுமார் ரூ.65,600) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விலை தற்போது அறிவிக்கப்படவில்லை.
ஆப்பிள் வாட்ச் முன்பதிவு மற்றும் விற்பனை: இந்தியாவில், Apple Watch Series 10 மற்றும் Apple Watch Ultra 2 இரண்டுமே முன்பதிவுக்கு கிடைக்கின்றன. முன்பதிவு செப்டம்பர் 13, மாலை 5:30 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்காவில் வாட்ச்கள் செப்டம்பர் 20 முதல் ரீடைல் கடைகளில் கிடைக்கும். இந்திய விற்பனை தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 மற்றும் ஏர்பாட்ஸ் மேக்ஸ்: இதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் 4 மற்றும் ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர்பாட்ஸ் 4: இந்த புதிய மாடல் ரூ.12,900 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சிலேஷன் அம்சத்துடன் கூடிய ஏர்பாட்ஸ் 4 மாடல் ரூ.17,900 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவை இரண்டும் செப்டம்பர் 20 முதல் ஆன்லைன் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கும்.
ஏர்பாட்ஸ் மேக்ஸ்: USB-C சார்ஜிங் வசதி உடன் புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடல் ரூ.59,900 விலைக்கு சந்தைக்கு வர உள்ளது. இதுவும் செப்டம்பர் 20 முதல் முன்பதிவுக்கு கிடைக்கிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications