தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள ஐபோனின் சில மாடல்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு ஆபத்தான ஸ்பைவேர் தாக்குதல் ஏற்படக் கூடும் என்ற எச்சரிக்கை செய்தியை ஆப்பிள் நிறுவன ஐபோன், ஐபேட் பயனர்களுக்கு ஈமெயில் மூலம் அனுப்பியுள்ளது.
இந்த ஸ்பைவேர் தாக்குதல் "pegasus" மென்பொருளைப் போன்றது என்றும், இது ஐபோனை தொலைவிலிருந்தே கட்டுப்படுத்த முயற்சிக்கும் "mercenary spyware" தாக்குதல் எனவும் அந்த எச்சரிக்கை பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்த எச்சரிக்கை செய்தியை ஆப்பிள் நிறுவனம் இந்தியா உட்பட உலகளவில் 98 நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ளது. இத்தகையை எச்சரிக்கை பதிவு வெளியிட்டது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டு முதலே, 150க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கைகளை ஆப்பிள் நிறுவனம் அனுப்பி வருகிறது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் தனது எச்சரிக்கை ஈமெயிலில், "pegasus போன்ற ஸ்பைவேர் மென்பொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மெர்செனரி தாக்குதல்கள்,இது மிகவும் ஆபத்தானவை. இவை, சாதாரண சைபர் குற்றவாளிகளின் செயல்கள் அல்லது வாடிக்கையாளர் மென்பொருள் தாக்குதல்கள் போன்றவை அல்ல" என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த ஸ்பைவேர் தாக்குதல்கள் குறித்து, இந்திய அரசின் CERT-In அமைப்பும் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஐபோனில் இருக்கும் பிரவுசாரன Safari-யின் 17.4.1 வெர்ஷன் முந்தைய பதிப்புகளிலும், iOS மற்றும் iPadOS இயங்குதளங்களின் 17.4.1 வெர்ஷன் முந்தைய பதிப்புகளிலும் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி, இந்த ஸ்பைவேர் தாக்குதல்கள் செய்ய முடியும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
எனவே ஐபோன், ஐபேட் வைத்திருக்கும் அனைவரும் சபாரி பிரவுசர் மற்றும் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் வெர்ஷன்களை செக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications