சீனா நிறுவனத்தின் திடீர் முடிவு.. இந்தியாவில் மிகப்பெரிய ஆலை.. எங்கு தெரியுமா?

ஆப்பிள் ஐபோன் நிறுவனத்திற்கு மிகப்பெரிய கேமரா சப்ளையராக இருக்கும், சீனாவை சேர்ந்த சன்னி ஓபோடெக் இந்தியாவில் கேமரா உற்பத்தி ஆலையை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தொடங்கவுள்ள இந்த ஆலைக்காக 300 மில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் சமீபத்திய காலமாக, சீனாவில் இருந்து பல்வேறு நிறுவனங்களும் வெளியேற ஆர்வம் காட்டி வருகின்றன.

சீனாவுக்கு வெளியே உற்பத்தி

சீனாவுக்கு வெளியே உற்பத்தி

அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் நிறுவனம் ஏற்கனவே சீனாவுக்கு வெளியே தனது உற்பத்தியினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் சமீபத்திய வெளியீடான ஐபோன் சீரிஸ் 14ஐ உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிப்புக்காக விஸ்ட்ரானுடன் கூட்டணியும் சேர்ந்துள்ளது. இதற்காக கர்நாடாகவில் அமைந்துள்ள உற்பத்தி ஆலையை வாங்கும் முயற்சியிலும் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் இருப்பு

இந்தியாவில் இருப்பு

இந்தியாவில் ஏற்கனவே ஐபோனின் பல்வேறு உதிரி பாகங்கள் அசெம்பிள் செய்யப்பட்டு வரும் நிலையில், உற்பத்தி செய்யும்போது செலவு குறைவாக இருக்கும். இதனால் விலை குறையவும் வாய்ப்பிருக்கிறது. அதோடு இந்தியா சீனாவுக்கு அடுத்த படியாக மிகப்பெரிய சந்தை என்பதால், அதனை தக்க வைத்துக் கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிடலாம்.

சன்னி ஓபோடெக்

சன்னி ஓபோடெக்

இதற்கிடையில் தற்போது ஆப்பிள் ஐபோனுக்கு சப்ளையராக இருக்கும் சன்னி ஓபோடெக் நிறுவனம், கேமரா உற்பத்தியினை இந்தியாவில் தொடங்கவுள்ளது. இதற்காக 300 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவினை இரண்டாவது பெரிய உற்பத்தி மையமாக மாற்றவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது.

வியட்நாமில் மேக்புக்

வியட்நாமில் மேக்புக்

சமீபத்தில் வியட்நாமில் மேக்புக்கினை தயாரிக்க திட்டமிடுவதாகவும் அறிவித்தது. இந்த நிலையில் தற்போது ஆப்பிளின் கேமரா சப்ளையர் சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு ஆப்டிகல் நிறுவனமாகும். இது தொலைபேசிகள், கார்கள் என பலவற்றிற்கும் கேமராக்களை உற்பத்தி செய்து சப்ளை செய்து வருகின்றது.

எங்கே?

எங்கே?

இது குறித்தான ஒப்பந்த நடவடிக்கையும் ஆப்பிள் நிறுவனத்துடன் சன்னி ஓபோடெக் போட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த திட்டத்தினை இந்த நிறுவனம் 2026 வரை பல கட்டமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த ஆலையை எங்கே அமையவிருக்கிறது என்பது குறித்தான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இது தான் திட்டம்

இது தான் திட்டம்

சன்னி ஓபோடெக் நிறுவனம் ஏற்கனவே திருப்பதியில் ஆலையை கொண்டுள்ளது. இங்கு ஸ்மார்ட்போனுக்கான கேமரா தயாரிக்கும் ஒரு ஆலையாகும். ஆக தற்போது திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டமும் அங்கேயே விரிவாக்கம் செய்யப்படுமா? அல்லது வேறு எங்கும் ஆலை அமைக்கப்படவுள்ளதா என்பது குறித்து கூறப்படவில்லை. எப்படியிருப்பினும் இந்த திட்டம் மூலம் 2024ல் தனது உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலை வாய்ப்பு அதிகரிக்கும்

வேலை வாய்ப்பு அதிகரிக்கும்

மொத்தத்தில் ஆப்பிள் சன்னியின் இந்த அறிவிப்பானது மேற்கொண்டு ஆப்பிள் தனது இருப்பினை வலுப்படுத்திக் கொள்ள உதவும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கும் உதவும் என்பதோடு, வேலை வாய்ப்பினையும் உருவாக்கும். இது மேற்கொண்டு இந்திய இளைஞர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாகவும் அமையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+