ஐபோன் உற்பத்தி நிறுத்தம்.. ஆப்பிள் முடிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக ஐபோன் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரும் நிலையில் வருடத்தில் முக்கியமான விற்பனை காலத்தில் உற்பத்தி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை நிறுத்தியுள்ளது மக்களை மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

 ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம்

10 வருடத்தில் முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக நிக்கி ஏசியா ஆய்வு கூறுகிறது, இந்த திடீர் முடிவுக்கு மிக முக்கியமான காரணம் சப்ளை செயினில் ஏற்பட்டு உள்ள பாதிப்பு தான்.

 ஐபோன் 13

ஐபோன் 13

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ ஆகிய போன்களின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை விற்பனைக்காக ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் கூடுதலாகப் பணியாற்றாமல் முதல் முறையாக ஒய்வு எடுத்து வருகின்றனர்.

 சப்ளை செயின் பிரச்சனை

சப்ளை செயின் பிரச்சனை

முதலில், ஐபோன் உற்பத்தி நிறுத்தியதற்குச் சந்தையில் இந்தப் போனுக்கு இருக்கும் குறைவான வரவேற்பின் காரணத்தாலும், டிமாண்ட் குறைந்துள்ளதாலும் நிறுத்தப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் சப்ளை செயின் பிரச்சனை காரணமாகத் தான் உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டுள்ளது ஆப்பிள்.

 சிப் தட்டுப்பாடு

சிப் தட்டுப்பாடு

உலக நாடுகளில் ஏற்கனவே சிப் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்கு அதிகளவிலான தட்டுப்பாடு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும், ஏற்கனவே சிப் தட்டுப்பாடு காரணமாக ஐபோன் 13 உற்பத்தியை 1 கோடி வரையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 90 மில்லியன் ஐபோன் 13

90 மில்லியன் ஐபோன் 13

2021ல் மட்டும் 90 மில்லியன் ஐபோன் 13-ஐ உலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது சிப் தட்டுப்பாடு மட்டும் அல்லாமல் போதுமான உதிரிப்பாகங்களும் இல்லாத காரணத்தால் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

 டிம் குக்

டிம் குக்

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ-வான டிம் குக் காலாண்டு முடிவுகளின் அறிவிப்பில் பேசும் போது ஆப்பில் சப்ளை செயின் பாதிப்பு மூலம் சுமார் 6 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக அறிவித்தது. தற்போது பண்டிகை காலத்தில் உற்பத்தி பெரிய அளவில் குறைந்துள்ள நிலையில் கூடுதலான பாதிப்பை ஆப்பிள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

 3 டிரில்லியன் டாலர்

3 டிரில்லியன் டாலர்

ஐபோன் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் ஆப்பிள் பங்குகள் நேற்றைய வர்த்தக முடிவில் 2.28 சதவீதம் அதிகரித்து 175.08 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.87 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து விரைவில் 3 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற உள்ளது ஆப்பிள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+