பெங்களூர்: இந்தியாவில் ஐபோன் தயாரிப்புக்கும் ஏற்றுமதிக்கும் பேஸ்மென்ட்டாக இருக்கும் தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் முதல் டாடா எலக்ட்ரானிக்ஸ் வரையிலான அசிம்பிளி நிறுவனங்கள் இருக்கும் வேளையில், கடந்த சில மாதங்களில் ஐபோன் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் தனது உற்பத்தி ஆலையை அமைக்கத் துவங்கியுள்ளது.
இதில் முதல் ஆளாக அமெரிக்காவின் பிரபலமான கொரில்லா கிளாஸ் தயாரிப்பாளர் கார்னிங் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலை அமைக்க ஒப்புதல் அளித்து, தொழிற்சாலை கட்டுமான பணிகளை வேகமாக செய்து வரும் வேளையில் புதிதாக ஒரு ஐபோன் உதிரிபாக நிறுவனம் வந்துள்ளது.

ஆப்பிள் சப்ளையர்களில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான ரேப்ரஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் (Rayprus Technologies) இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க ஆர்வம் காட்டியுள்ளது.
ரேப்ரஸ் டெக்னாலஜிஸ்: பாக்ஸ்கான் துணை நிறுவனமான ரேப்ரஸ் டெக்னாலஜிஸ், உயர்ந்த தரம் வாய்ந்த துல்லிய கேமரா மற்றும் லென்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் பிற ஆப்பிள் சப்ளையர் போலவே சென்னைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிவிஸ்டாகி பெங்களூருக்கு செல்வதாகக் கூறப்படுகிறது.
பாக்ஸ்கான் வளாகம்: பெங்களூருவில் அமைக்கப்பட்டு வரும் புதிய பாக்ஸ்கான் வளாகத்தில் பாக்ஸ்கான் துணை நிறுவனமான ரேப்ரஸ் டெக்னாலஜிஸ் தனது ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் விமான நிலையம்: பாக்ஸ்கான் வளாகம் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் அருகில் பெரும் முதலீட்டில் உருவாகி வருகிறது, இந்த வளாகத்திற்குள்ளேயே ரேப்ரஸ் நிறுவனம் தனது கேமரா மற்றும் லென்ஸ் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.
சென்னை-க்கு ஒரு வாய்ப்பு: இதற்கான பேச்சுவார்த்தை பாக்ஸ்கான் உடன் ரேப்ரஸ் நிறுவனம் நடத்தி வருகிறது, இது தோல்வி அடைந்தால் சென்னை-க்கு வர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. காரணம், பாக்ஸ்கான் பெங்களூர் வளாகத்தில் ஏற்கனவே பல்வேறு மெகா திட்டத்துடன் தான் களமிறங்கியுள்ளது.
நீண்ட கால திட்டம்: முன்னணி உபகரண உற்பத்தியாளர்கள் பெரிய நிறுவனங்களுடன் இணைவதைப் பார்க்கும் போது, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் நீண்ட கால மற்றும் தொடர் உற்பத்தி அதிகரிப்பு திட்டத்தை உறுதிப்படுத்துகிறது.
ஆப்பிள் இலக்கு: ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் இந்தியாவில் இருந்து மட்டும் 40 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்களைத் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்யவும், உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் அமெரிக்காவின் ஆப்பிள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
விநியோக சங்கிலி: இதற்கு ஏற்றவாறு ஐபோன் உபகரண உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமைத்து, இந்திய விநியோக சங்கிலியில் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
700 கோடி ரூபாய் முதலீடு: உலகின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தியாளரான தைவான் நாட்டின் பாக்ஸ்கான் நிறுவனம், பெங்களூருவில் உள்ள தொழிற்சாலை மற்றும் பல்வேறு வசதிகளுக்காக 2700 கோடி ரூபாய் முதலீடு செய்து வருகிறது.
300 ஏக்கர் உற்பத்தி வளாகம்: கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள தகவல் தொழில்நுட்ப முதலீடு பிராந்தியத்தில் (ITIR) அமைக்கப்படும் 300 ஏக்கர் உற்பத்தி வளாகம், ஆண்டுதோறும் 2 கோடி ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவில் மிகப்பெரிய பாக்ஸ்கான் நிறுவனத்தின் வளாகமாக இருக்கும், சென்னை வளாகம் 2வது இடத்திற்குத் தள்ளப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications