அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தகப் போரின் தீவிரம் குறைந்துவிட்டாலும், சீனாவின் வளர்ச்சியை முட்டுக்கட்டை போடும் வகையில் பல அறிவிப்புகளையும், தடைகளையும் அமெரிக்கா விதித்து வந்தது. இதில் முக்கியமாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் செமிகண்டக்டர் சிப் தயாரிப்புத் துறையில் அதிகப்படியான நெருக்கடியைக் கொடுத்தது.
அமெரிக்காவின் இந்த நெருக்கடி காரணமாகத் தான் ஆப்பிள் நிறுவனம் தனது பெரும் பகுதி உற்பத்தியை இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளுக்கு மாற்றியது. இந்த உற்பத்தி மாற்றம் வாயிலாகச் சீனாவின் வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஆகியவற்றில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் தடைகளைத் தாண்டி வர்த்தகத்திலும், சிப் தொழில்நுட்பத்திலும் வென்றுள்ளதைக் காட்டும் விதமாகத் தற்போது சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சீன அரசு கடந்த சில மாதங்களாக ஐபோன் பயன்படுத்துவதை மொத்தமாக நிறுத்த அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது, இதைத் தொடர்ந்து சீன மக்களையும் ஆப்பிள் ஐபோன்களுக்குப் பதிலாக உள்நாட்டு உற்பத்தி பொருட்களைப் பயன்படுத்தக் கேட்டுக்கொண்டது.
இதன் எதிரொலியாகச் சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சி அடைந்து, உள்நாட்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த முக்கியமான மாற்றம் சீனாவின் உள்நாட்டு தயாரிப்பாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
மேலும் சீன அரசு மற்றும் மக்களின் முடிவையொட்டி அந்நாட்டின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் விற்பனையாளரான சியோமி நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலர் வரையில் அதிகரித்தது.
சியோமி-யின் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள், பிற வணிக முயற்சிகள் மீதான முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்த காரணத்தால் ஜூன் மாதத்தில் இருந்து சியோமி நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் $20 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
சியோமி நிறுவனம் ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது, சியோமி பங்குகள் ஜூன் மாதத்தில் இருந்து சுமார் 60% க்கும் அதிகமாக உயர்ந்தது, ஹாங் செங் டெக் குறியீட்டில் டாப் நிறுவனமாக மாறியுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான சீனாவில் ஐபோன் ஆதிக்கம் பல ஆண்டுகளாக உயர்ந்து வந்த நிலையில், நீண்ட காலத்திற்குப் பின்பு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் உயர துவங்கியுள்ளது. இதனால் சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம், வருவாய் ஆகியவை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் மேட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஐபோன்களை அனைத்து பிரிவுகளிலும் தகர்த்துச் சிறப்பான ஸ்மார்ட்போனாக உருவெடுத்து சீன மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அக்டோபர் பிற்பகுதியில் அறிமுகமான
Xiaomiயின் 14 சீரியஸ் போன்களுக்கு இதுவரையில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்களைப் பெற்றுள்ளது.
இதற்கு ஏற்றார் போல் ஆப்பிள் 15 பல பிரச்சனைகள் உடன் அறிமுகமாகி மோசமான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் ஜப்பான் நாட்டைத் தொடர்ந்து சீனாவிலும் ஆப்பிள் ஆதிக்கம் உடைகிறது, அடுத்தச் சில காலாண்டில் ஆப்பிள் வருவாய், லாபத்தில் பெரும் ஓட்டையைப் பார்க்க முடியும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications