மும்பை: ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன், மேக் புக், ஐ பேட் மற்றும் ஏர் பாட்களுக்கு தேவையான உபகரணங்களை சப்ளை செய்வதற்கு இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் ஐபோன், மேக் புக், ஐ பேட், ஏர் பாட் உள்ளிட்டவற்றை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்த பொருட்களுக்கு தேவையான பாகங்களை ஆப்பிள் நிறுவனம் சீனாவை சேர்ந்த விநியோகஸ்தர்கள் இடமிருந்து பெற்று வந்தது.

தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. எனவே இந்த பாகங்களை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வருவதிலும் சீன நிறுவனங்களை இந்தியாவில் வந்து தொழில் தொடங்க வைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலேயே செயல்படக்கூடிய விநியோகஸ்தர்களை தேடி வருகிறதாம்.
அந்த வகையில் 40 இந்திய நிறுவனங்களோடு ஆப்பிள் நிறுவனம் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. டிக்ஸன் டெக்னாலஜிஸ், ஆம்பர் எலக்ட்ரானிக்ஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் மதர்சன் ஆகிய குழுமத்தினரோடு உடன்பாடு எட்டி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது இந்தியா மற்றும் சீனா இடையிலே நிலவக்கூடிய வர்த்தகப் பிரச்சினை மற்றும் சீன நிறுவனங்களுக்கு பல்வேறு நிபந்தனைகளோடு மத்திய அரசு அனுமதி தருவது உள்ளிட்டவை காரணமாக ஆப்பிள் நிறுவனத்திற்கு உபகரணங்களை வழங்கி வரும் நிறுவனங்கள் இந்தியாவிற்கு அவற்றை அனுப்பி வைப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனவாம்.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தான் பெரும் அளவில் ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. இதற்கான உபகரணங்களை பெறுவது சிக்கல் ஏற்படுவதாலேயே உள்நாட்டிலேயே ஆப்பிள் பொருட்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளது. கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட ஆப்பிள் நிறுவன போன்கள் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை தான். மேலும் எனவே மேக் புக், ஆப்பிள் வாட்ச் போன்றவற்றையும் இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக தென்கொரியா, தைவான் மற்றும் ஜப்பான் நிறுவனங்களோடு இந்திய நிறுவனங்கள் இணைந்து கூட்டு நிறுவனங்களாக அமைத்து கேமரா மற்றும் டிஸ்ப்ளே ஆகியவற்றை தயாரித்து வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதா என ஆய்வு செய்து வருகிறது.
இந்தியாவில் இந்த நிறுவனத்தின் போன்களின் தயாரிப்பும் விற்பனையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2023-24 ஆம் நிதிய ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த பொருட்களின் மதிப்பு 2,745 கோடி ரூபாய் ஆகும். இதில் பெரும்பாலானவை ஐபோன்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும் இந்த நிறுவனம் 9 மில்லியன் போன்களை தயாரித்து ஏற்றுமதி செய்துள்ளது. இதில் ஜூலை - செப்டம்பர் மாதத்தில் மட்டும் 4 மில்லியன் போன்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications