ஆப்பிள் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தனது புதிய தயாரிப்புகளை மொத்தமாக வெளியிட்டு டெக் ரசிகர்களையும், மக்களையும் கட்டிப்போட்டுவிடுகிறது. இப்படி இந்த முறையும் அடுத்த சில மணிநேரத்தில் ஆப்பிள் தனது புதிய தயாரிப்புகளை வெளியிட உள்ளது. இந்த ஆண்டு ஆப்பிள் ஈவென்ட்-க்கு Glowtime எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த glowtime என்ற சொல்லுக்கும் ஆப்பிள் SIRI, AI-க்கும் பெரும் தொடர்பு இருக்கும் எனச் சந்தையில் கணிக்கப்படுகிறது. இது அனைத்தும் ஒருபக்கம் இருந்தாலும், ஆப்பிள் -க்கு இந்த லான்ச் மிகவும் முக்கியம், காரணம் பங்குச்சந்தையில் ஆப்பிள் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதோடு, வாரன் பபெட் போன்ற பல முன்னணி முதலீட்டாளர்களும் ஆப்பிள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் வெறும் 2 சதவீதம் மட்டுமே உயர்ந்தது ஆப்பிள் பங்குகள், முதலீட்டாளர்கள் இந்த ஒரு லான்ச்-க்காக தான் காத்திருக்கின்றனர். கடந்த முறை போலவே இந்த முறையும் மக்களைக் கவரவில்லை எனில் ஆப்பிள் பங்குகள் பெரும் சரிவைச் சந்திக்கும். இன்று ஆப்பிள் பங்குகள் கிட்டத்தட்ட 0.70 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையிலான சரிவுடன் துவங்கும் எனச் சந்தை நிலவரம் கூறுகிறது.
பொதுவாக ஆப்பிள் SIRI பயன்படுத்தும் போது ஸ்கிரீன் ஓரத்தில் பல்வேறு வண்ணத்தில் Glow ஆகும், இதை தற்போது ஏஐ உடன் இணைப்பதைக் குறிக்கும் வகையில் இந்த வருட ஆப்பில் ஈவென்ட்-க்கு glowtime எனப் பெயரிடப்பட்டதாகக் கருத்து நிலவுகிறது.
இதேபோல் ஆப்பிள் கடந்த 2 வருடமாக ஏஐ சேவையைக் கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் இந்த ஆண்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப் பல அம்சங்களைக் கொண்டு வருவதன் மூலம் சந்தையில் மீண்டும் ஆப்பிள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதால் இந்த லான்ச் ஈவென்ட் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மிகவும் சக்திவாய்ந்த மற்றும் சிறந்த கேமரா அம்சங்களைக் கொண்ட iPhone 16 ஐ அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இது முழுமையாக Apple Intelligence (AI) உடன் வெளியாகும் முதல் iPhone ஆகவும் இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
ஆப்பிள் இன் iPhone 16 அறிமுக விழா செப்டம்பர் 9 ஆம் தேதி இந்திய நேரப்படி 10.30 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விழா ஆப்பிளின் கலிபோர்னியா, குப்பர்டினோவில் நடைபெறும்.
IPhone 16 சீரியஸ் போன்களை தாண்டி, புதிய வாட்ச்கள் மற்றும் ஏர்பாட்களின் தொகுப்புகளையும் இன்று அறிமுகம் செய்ய உள்ளது. ஆப்பிள் Glowtime நிகழ்ச்சியில் அப்படி என்ன புதுசா வந்திட போகுது..? வாங்கப்பார்ப்போம்.
Apple Intelligence: ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்பதைத் தான் ஆப்பிள் நிர்வாகம் மிகவும் சாதுரியமாக Apple Intelligence என அழைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தற்போது சந்தையில் இருக்கும் ஏஐ சேவை போல் இருக்காது என்பதால் டெக் மக்களின் விமர்சனத்தை எதிர்கொள்ள இடம் கொடுக்கக் கூடாது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு AI என்பதை Apple Intelligence என அழைப்பதாகக் கருத்து நிலவுகிறது.
இந்த Apple Intelligence-ல் ஆப்பிள் ஐபோன் திரையில் என்ன உள்ளதோ அதைப் புரிந்துகொள்ளும் திறன் போன்ற AI அம்சங்களும், ஜூன் மாதம் WWDC இல் அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்களான மேம்படுத்தப்பட்ட SIRI, பட உருவாக்கம், AI rewrite மற்றும் கால் ரெக்கார்டிங் & டிரான்ஸ்கிரிப்ஷன் திறன்கள் ஆகியவற்றையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AI க்கு புதிய பிராசசர்: Apple Intelligence தாண்டி அனைத்து iPhone 16 மாடல்களும் சக்திவாய்ந்த புதிய A18 சிப்ஸைப் பெறும் என்று வதந்திகள் வெளியாகியுள்ளது.
iPhone 15 Pro போனில் பயன்படுத்தும் A17 Pro பிராசசர் தான் தற்போது Apple Intelligence ஐ ஆதரிக்கும் ஒரே A-series சிப் ஆகும், ஆனால் இது ஐபோன் 16 சீரியஸ்-க்கு போதுமானதாக இருக்காது. இதனால் அடுத்த தலைமுறை சிப் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
புதிய நிறம்: iPhone 16 மாடல்கள் புதிய வண்ணங்களில் வருவதுடன், இந்த ஆண்டு பின்புறத்தில் சற்று வித்தியாசமாகத் தோன்றும் என கூறப்படுகிறது.
கேமரா: வெளியான டெமி மாதிரிகள் உண்மையாக இருந்தால் கேமரா மாட்யூல், iPhone 12 மற்றும் iPhone X-ல் இருப்பது போல இரண்டு லென்ஸ்கள் செங்குத்தாக அடுக்கப்படும். iPhone 13 முதல் பயன்படுத்தப்பட்ட அமைப்பு மாற்றப்படும்.
விஷன் ப்ரோ: கேமரா அமைப்பை மாற்றுவதற்கு முக்கியமான காரணம் ஆப்பிள் விஷன் ப்ரோ. இதில் பயன்படுத்தும் போது வெர்டிக்கல் கேமரா அமைப்பு பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்த மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற கருவிகள்: ஐபோன் 16 சீரயஸ் போன்களுடன், புதிய Apple Watch மற்றும் AirPods அறிமுகம் செய்யப்பட உள்ளது. முக்கியமான ஆப்பிள் ஐபோனில் 5x "tetraprism" telephoto lense வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications