உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் அதிகப்படியான டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் ஆப்பிள் மட்டும் இதுவரையில் பணிநீக்கம் செய்யாமல் தொடர்ந்து ஊழியர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைக் கொடுத்து வந்த நிலையில் தற்போது ஒப்பந்த ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இதை விட முக்கியமாக ஆப்பிள் தனது பணிநீக்கத்தை ஒப்பந்த ஊழியர்கள் உடன் நிறுத்திக்கொள்ளுமா அல்லது தனது நிரந்தர ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதன் மூலம் 2022 ஆம் ஆண்டு முதல் டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிள்-ம் இணைய உள்ளது.
இதேபோல் ஆப்பிள் நிறுவனம் இதுநாள் வரையில் பணிநீக்கம் தவிர்த்தது எப்படி என்பதையும் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ஆப்பிள் நிறுவனம்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் தனது தயாரிப்புகளையும், சேவைகளையும் விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் கடந்த சில நாட்களாகப் பல நூறு ஒப்பந்த ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றது.
டெக் ஊழியர்கள் பணிநீக்கம்
பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஒப்பந்த ஊழியர்களாக இருந்தாலும் பெரும்பாலானவர்கள் ஆப்பிள் ஊழியர்கள் உடன் இணைந்து பணியாற்றுபவர்கள். பொதுவாக ஆப்பிள் நிறுவனம் 12 முதல் 15 மாத ஒப்பந்தத்தில் ஊழியர்களைப் பணியில் அமர்த்தும்.
ஒப்பந்ததாரர்கள் ரத்து
இந்த நிலையில் ஒப்பந்தம் முடியும் வரையில் காத்திருக்காத ஆப்பிள் நிர்வாகம் நேரடியாக ஒப்பந்ததாரர்களையே ரத்து செய்துள்ளது என நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உரிய ஒப்பந்ததாரர்கள் கீழ் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணியை இழந்துள்ளனர்.
ஆப்பிள் சிஇஓ டிம் குக்
சில நாட்கள் முன்பு ஆப்பிள் சிஇஓ டிம் குக் பணிநீக்கம் என்பது கடைசிக் கட்ட நடவடிக்கை என அறிவித்தார், தற்போது ஒப்பந்ததாரர்களை மட்டுமே ரத்து செய்துள்ளது, இதனால் ஆப்பிள் எந்த ஊழியர்களையும் அதிகாரப்பூர்வமாகப் பணிநீக்கம் செய்யவில்லை.
severance pay செலவு மிச்சம்
இது மட்டும் அல்லாமல் ஒப்பந்ததாரர்களை நீக்குவது மூலம் வெளியேறும் ஊழியர்களுக்கு ஆப்பிள் நிர்வாகம் 3 மாதம், 4 மாதம், 6 மாதம் என severance pay தொகையை அளிக்கத் தேவையில்லை.
எத்தனை ஊழியர்கள் பாதிப்பு
மேலும் இந்த ஒப்பந்ததாரர்களை மிகவும் எளிதாக நீக்கியுள்ளது மூலம் இத்துறையில் இருக்கும் வேலைவாய்ப்பு ஒப்பந்ததாரர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தப் பணிநீக்கத்தின் மூலம் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அறிவிக்கப்படவும் இல்லை, யாராலும் கணிக்க முடியாமலும் உள்ளது.
40 ஒப்பந்ததாரர்கள்
ஆனால் தற்போது சமூகவலைத்தளத்தில், வேலைவாய்ப்புச் சந்தையில் வெளியாகும் தகவலைப் பார்க்கும் போது பல நூறு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. ஆப்பிள் உடன் சுமார் 40க்கும் அதிகமான வேலைவாய்ப்பு சேவை நிறுவனங்கள் பணியாற்றியிருக்கும் காரணத்தால் உறுதியான தகவலைத் திரட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது.
வேலைவாய்ப்பு சேவை நிறுவனங்கள்
இதேபோல் இந்த வேலைவாய்ப்பு சேவை அளிக்கும் நிறுவனங்களும் (Staffing Firms) தனது நற்பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக முழுமையான தகவல்களை வெளியிடாமல் உள்ளது. ஆனால் பாதிப்பு டெக் ஊழியர்களுக்கு.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications