Apple layoff: ஐபோன் 18 வெளியிட்ட நேரம்.. ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய புதிய சிஇஓ ஜான் டெர்னஸ்!

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள், தனது ஐபோன் 18 சீரியஸ் போன்களை வெளியிட்டு கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்தியாவில் முந்தை ஐபோன் 17 சீரியஸ் போன் விற்பனையை காட்டிலும் முதல் நாள் விற்பனையில் சுமார் 20 - 30 சதவீதம் உயர்வைக் கண்டது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் முன் புதிய சிஇஓ ஜான் டெர்னஸ் தலைமையிலான ஆப்பிள் நிர்வாகம் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு ஆப்பிள் ஊழியர்களைப் பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆப்பிள் 2 மாதங்களுக்கு முன்பு தான் 200க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

Apple layoff: ஐபோன் 18 வெளியிட்ட நேரம்.. ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய புதிய சிஇஓ ஜான் டெர்னஸ்!

தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி ஆப்பிள் நிர்வாகம் அதன் பிட்னஸ்+ சேவை பிரிவில் இருந்து கடந்த வாரம் முதல் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதாக ப்ளூம்பெர்க் ரிப்போர்ட் கூறுகிறது.

ஆப்பிள் ஐபோன், ஆப்பிள் வாட்ச் போன்றவற்றில் வீடியோ இல்லாமல் வொர்க்அவுட் செய்யும் ஆடியோ சேவையை அளித்து வரும் பிட்னஸ்+ சேவையின் ஆடியோ பிரிவு ஊழியர்களை ஆப்பிள் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.

இது பேமெண்ட் அடிப்படையில் வழங்கப்படும் சேவை என்பதால் மேம்பட்ட கன்டென்ட்களை உருவாக்கி வந்த இப்பிரிவில் தற்போது வர்த்தக ரீதியாக பணிநீக்கம் செய்துள்ளது. இந்த பணிநீக்கத்தால் புதிய கண்டென்ட் அறிமுகமாகும் வேகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் ஆப்பிள் நிறுவனம் சிரி, விஷன் ப்ரோ, இன்டலிஜென்ட் சிஸ்டம் எக்ஸ்பிரீயன்ஸ் போன்ற பிரிவுகளில் இருந்து பணிநீக்கம் செய்தது. இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் சாப்ட்வேர் இன்ஜினியரிங் பிரிவில் இருப்பவர்கள் ஆவார்.

இதில் முக்கியமாக ஆப்பிள் தனது அரிய கண்டுபிடிப்பு எனக் கூறி வரும் விஷன் ஃப்ரோ பிரிவில் 100 ஊழியர்களையும், சிரி 100 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது. ஆகஸ்ட் பணிநீக்கத்தின் போது இதே பிரிவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டாலும் இதே அளவிலான எண்ணிக்கையில் இருக்காது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் ஆரக்கிள், உபர், அடிடாஸ் போன்ற நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளது, இதன் வரிசையில் தற்போது ஆப்பிள் சேர்ந்துள்ளது.

உலகின் முன்னணி ஸ்போர்ட்ஸ் ஆடை மற்றும் காலணி நிறுவனமான அடிடாஸ், இந்தியாவில் செயல்படும் தனது டெக் பிரிவில் பெரிய அளவில் பணிநீக்கம் செய்துள்ளது. குருகிராமில் செயல்பட்டு வரும் அடிடாஸ் இந்தியா டெக் ஹாப்-ல் சுமார் 700 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இதில் பாதிப் பேர் அதாவது 300 முதல் 350 பேர் வரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது அடிடாஸ்.

செப்டம்பர் 15ஆம் தேதி இந்நிறுவனத்தின் டவுன் ஹால் கூட்டத்தில் ஊழியர்களுக்கு பணிநீக்கம் குறித்து இந்நிர்வாகம் தெரிவித்த உடனே பல ஊழியர்களுக்கு பணிநீக்கம் குறித்த ஈமெயில் வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+