அமெரிக்கா ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் கடந்த ஆண்டு அதன் மொத்த வருவாயில் 18 சதவீதத்தைக் சீனா சந்தையில் பெற்றது மூலம் இந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் மூன்றாவது பெரிய சந்தையாக விளங்குகிறது.
ஆப்பிளின் பெரும்பாலான தயாரிப்புகளை அதன் மிகப்பெரிய சப்ளையரான ஃபாக்ஸ்கான் சீனாவில் தான் தயாரிக்கிறது. ஐபோன் தயாரிப்பின் மிகப் பெரிய தளமாக சீனா விளங்குகிறது.

இந்நிலையில் சீன அரசு ஊழியர்கள் ஐபோன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சிடைய செய்தது.
கடந்த இரண்டு நாட்களில் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பீடு 6 சதவிகிதத்துக்கும் அதிகமாக சரிந்து சுமார் 200 பில்லியன் டாலர் அளவிலான இழப்பை எதிர்கொண்டது. பெய்ஜிங் மத்திய அரசு நிறுவன அதிகாரிகளுக்கு ஐபோன்களை அலுவலகத்துக்குள் கொண்டு வரவோ அல்லது வேலைக்காக பயன்படுத்தவோ கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
அடுத்த நாள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அரசாங்க ஆதரவு நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் மீதும் தடை விதிக்கப்படலாம் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்தது. ஐபோன் 15 அறிமுகத்துக்கு முன்னதாக இந்த அறிக்கைகள் வந்துள்ளன.
செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் ஆப்பிளின் நிறுவனத்தின் முக்கியமான வருடாந்திர விழாவில் ஐபோன் 15 மற்றும் இதர முக்கிய கருவிகள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் உலகின் மிக உயர்ந்த பங்குச் சந்தை மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, இது $2.8 டிரில்லியனுக்கு அருகில் உள்ளது, சீன அறிவிப்பு மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் சில சப்ளையர்களின் பங்குகளும் சரிந்துள்ளன.
ஸ்மார்ட்போன் சிப்களின் உலகின் மிகப்பெரிய சப்ளையர் குவால்காம், வியாழன் அன்று 7 சதவீதத்துக்கும் மேலாக குறைந்துள்ளது. தென் கொரியாவின் SK Hynix இன் பங்குகள் வெள்ளியன்று சுமார் 4 சதவீதம் குறைந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. அமெரிக்கா - சீனா மத்தியிலான பதற்றங்கள் ஐபோன் தடை அறிவிப்பு மூலம் கூடுதலாக மோசமடைந்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications