உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான ஆப்பிள் சமீபத்தில் தனது டெவலப்பர் கூட்டத்தில் அறிமுகம் செய்த விஷன் ப்ரோ என் AR - VR ஹெட்செட் குறித்த ரிவ்யூவால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்பாக முன்னணி தமிழ் யூடியூபர்கள் மத்தியில் பெரிய சண்டை உருவாகி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் உலகிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமான வரலாற்று சாதனை படைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். புதன்கிழமை அமெரிக்க வர்த்தகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக 3 டிரில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டை பெற்றுள்ளது. இதுகிட்டத்தட்ட இந்திய ஜிடிபி-க்கு இணையான ஒன்று.

ஆப்பிள் நிறுவன பங்குகள் புதன்கிழமை வர்த்தக முடிவில் 0.6 சதவீதம் உயர்ந்து 189.25 டாலர் உடன் முடிவடைந்த காரணத்தால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.98 டிரில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஒரு வாரமாக மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு அதிகரித்து வந்த நிலையில் முதல் நிறுவனமாக ஆப்பிள் 3 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்றுள்ளது.
3 டிரில்லியன் டாலர் என்ன பெரிய விஷயமா என்று நீங்கள் கேட்டால் ..? ரொம்ப பெரியது 1 டிரில்லியன் எனில் 1 லட்சம் கோடி, இதுவே டாலர் ரூபாய் கணக்கிட்டாலே் 82 லட்சம் கோடி ரூபாய், அப்போ 3 டிரில்லியன் டாலர் எனில் 246 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது ஆப்பிள்.
சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 3.75 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை தொட்டு உள்ளதாக தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 2 டிரில்லியன் டாலராக மட்டுமே இருந்த நிலையில் தற்போது 3.75 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பீட்டின் இலக்கை விடவும் 3 மடங்கு அதிகம். ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் முன்னணி டெக் நிறுவனங்களின் சந்தை மதிப்பீடும் அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications
