ஸ்மார்ட்போன் முதல் உயர்தர எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் ஆப்பிள், 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட் வாட்ச் பெரிய அளவிலான வர்த்தகத்தை பெற்று இன்றளவும் அதிகப்படியான வரவேற்பை மக்களிடம் கொண்டுள்ளது. இதோடு ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.
ஆப்பிள் ஒவ்வொரு சீரியஸ்-க்கு புதிய அப்டேட்களை சேர்த்து வருகிறது, இந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய தலைமுறை ஆப்பிள் வாட்சை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய மாடலில் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆப்பிள் தனது ஸ்மார்ட்வாட்ச்-ல் கேமராவை இரண்டு மாடல்களில் இணைத்து வெளியிட உள்ளது. ஒன்று, வழக்கமான ஆப்பிள் வாட்ச் மாடல், இதில் டிஸ்பிளேக்குள்ளேயே கேமரா இருக்கும். மற்றொன்று, அல்ட்ரா வாட்ச் மாடல், இதில் டிஜிட்டல் கிரவுனுக்கு அருகில் ஒரு வெளியில் தெரியும்படியான கேமரா பொருத்தப்படும்.
இந்த இரு புதிய மாடல்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்வாட்ச்-ல் பெரிய தொழில்நுட்ப முன்னேற்றம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஆப்பிள் புதுமையை கொண்டு வந்துள்ளது. இதேவேளையில் ஸ்மார்ட்வாட்ச்-ல் இப்போது தான் முதல் முறையாக கேமரா அறிமுகம் செய்யப்படுகிறதா என்றால் இல்லை, பல பிராண்டுகள் அறிமுகம் செய்துள்ளது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஆப்பிள் வாட்சில் கேமரா ஒருங்கிணைக்கப்படுவதால், செயற்கை நுண்ணறிவைப் சேவைகளை பெரிய அளவில் பயன்படுத்தும் வாய்ப்பை ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும். தற்போது ஐபோன்களில் மட்டுமே உள்ள விஷுவல் இன்டெலிஜென்ஸ் (Visual Intelligence) அம்சம், கேமரா ஆப்ஷன் கொண்டு, ஆப்பிள் வாட்சிற்கும் விரிவுபடுத்தப்படும். அதே நேரத்தில், ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ வரிசையிலும் கேமராவை ஒருங்கிணைக்க ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம் இதே போன்ற செயல்பாடுகளை வழங்க முடியும்.
கேமரா மற்றும் விஷுவல் இன்டெலிஜென்ஸ் அம்சங்கள் உடன் ஆப்பிள் வாட்ச் 2027 ஆம் ஆண்டுக்குள் சந்தைக்கு வரும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆப்பிளின் சொந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகளால் இயக்கப்படும் என்றும் தெரிகிறது. இது வெற்றி அடைந்தால் ஆப்பிள் பொருட்களில் ஜெமினி, சாட்ஜிபிடி போன்றவைக்கு பதிலாக சொந்த ஏஐ மாடல் செயல்படும்.
சமீபத்தில் தான் ஆப்பிள் தனது Siri சேவையை சில செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளை இணைத்து செயல்படும் வகையில் மேம்படுத்தப்பட்டது. ஆப்பிள் ஏஐ சேவைக்காக பெரும் அணியை உருவாக்கி வருகிறது, கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஆப்பிள் அடுத்த 2 வருடத்தில் AI வைத்து பெரும் புரட்சி செய்யப்போகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications