கூகுள்-க்கு மிகப்பெரிய வர்த்தகமே அதன் சர்ச் இன்ஜின் சேவை தான், குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் மோனோபோலியாகவே செயல்படுகிறது என்றால் மிகையில்லை. இப்படியிருக்கையில் ஆப்பிள் கூகுள் ஆதிக்கத்தை உடைக்க பல முறை முயற்சி செய்தும் தோல்வி அடைந்து தொடர்ந்து கூகுள் நிறுவனத்தையே நம்பியிருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஜப்பான் நாட்டில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் போன்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகப்படியான விற்பனையை பதிவு செய்து ஆப்பிள் ஐபோன் ஆதிக்கத்தையும், சந்தை பங்கீட்டையும் குறைத்தது, ஜாப்பானில் ஆப்பிள்-ஐ தோற்கடிப்பது என்பது அமெரிக்காவில் தோற்கடிப்பது போன்றது. காரணம் அமெரிக்காவிலும் சரி, ஜப்பானிலும் சரி 55 சதவீதத்திற்கும் அதிகமான சந்தை பங்கீட்டு ஆதிக்கத்தை வைத்திருப்பது ஆப்பிள் ஐபோன் தான்.

இப்படியிருக்கும் சூழ்நிலையில், ஆப்பிள் சமீபத்தில் DuckDuckGo என்ற பிரபல சர்ச் இன்ஜின் நிறுவனத்துடன் தனது Safari browser-ல் பிரைவேட் மோட் பிரவுசிங் சேவைக்கு கூகுள் சர்ச் இன்ஜின்-ஐ நீக்கிவிட்டு DuckDuckGo சர்ச் இன்ஜின்-ஐ வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக anti-trust வழக்கு நடைபெற்று வரும் வேளையில் இதுகுறித்த முடிவுகள் வெளியான உடனேயே ஆப்பிள் - DuckDuckGo தொடர்பான ஒப்பந்தம் வெளிச்சத்திற்கு வரும் என தெரிகிறது. இது கூகுள் ஆதிக்கம் உடையும் தருணமாக உள்ளது.
சர்ச் மார்கெட்டில் கூகுள் மட்டுமே 90 சதவீதம் சந்தை ஆதிக்கத்தை கொண்டு இருக்க கூகுள் ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் AT&T போன்ற வயர்லெஸ் டெலிகாம் நிறுவனங்களுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் தொகை கொடுத்து டீபால்ட் சர்ச் இன்ஜினாக வைக்க முறைகேடாக பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என அமெரிக்க சட்ட துறை வழக்கு விசாரணையில் கேள்வி எழுப்பியது.
இதேபோல் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக anti-trust வழக்கில் மைக்ரோசாப்ட் தலைவர் சத்ய நாடெல்லாவும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். இது அனைத்தும் தற்போது கூகுள்-க்கு எதிராக திரும்பியுள்ளது.
மேலும் வழக்கறிஞர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் டீபால்ட் சர்ச் இன்ஜினாக மாற டீல் பேசப்பட்டதா என்ற கேள்விக்கும், ஆம் என்று கூறிவிட்டு, ஆப்பிள் நிறுவனம் மைக்ரோசாப்ட் பிங் சேவையை டிபால்ட் சர்ச் இன்ஜின் ஆக தேர்வு செய்யும் பட்சத்தில் பல பில்லியன் டாலர்களை இழக்க வேண்டி வரும், ஆனால் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இப்படியானால் ஆப்பிள் கருவிகளில் டீபால்ட் சர்ச் இன்ஜின் ஆக மைக்ரோசாப்ட் பிங், ப்ரைவேட் மோட் பிரவுசிங் சேவைக்கு DuckDuckGo நியமிக்க முடிவு செய்யப்படும். கூகுள் நிறுவனத்திற்கு எதிராக anti-trust வழக்கின் முடிவை தொடர்ந்து மைக்ரோசாப்ட் - ஆப்பிள் - DuckDuckGo ஒப்பந்தம் வெளியாகும்.
ஆப்பிள் செய்வது ஜப்பான் சந்தைக்காக மட்டும் அல்லாமல் சர்ச் சேவையில் சுமார் 90 சதவீத ஆதிக்கத்தை கொண்டு இருக்கும் கூகுள்-ஐ உடைக்கவும் தான். இது பெரும் பின்னடைவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications