உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் Wonderlust நிகழ்ச்சி இன்று இரவு நடக்க உள்ளது, ஒவ்வொரு வருடமும் நடக்கும் நிகழ்ச்சி என்றாலும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை பார்க்க டெக் வல்லுனர்கள் முதல் சாமானிய மக்கள் வரையில் அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள்.
Wonderlust நிகழ்ச்சியை யூடியூப், ஆப்பிள்.காம், ஆப்பிள் டிவி ஆப் போன்றவற்றில் லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யும் அனைத்து பொருட்களும் ப்ரீ ஆர்டர் புக்கிங் எடுத்துக்கொள்கிறது ஆப்பிள், அதன் பின்பு அதிகாரப்பூர்வ விற்பனை மற்றும் டெலிவரியை ஒரு வாரத்தில் துவங்கும்.

பொதுவாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை சீனா, தைவான் போன்ற நாடுகளில் தயாரித்து, அதன் பின்பு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து டெலிவரி செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் கடந்த சில வருடமாக இந்தியாவில் ஐபோன் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இருக்கும் ஆப்பிள் சப்ளையர்கள் முதலில் பழைய ஐபோன்களை தான் தயாரித்தனர், அதுவும் மலிவு விலை போன்களை. ஆனால் கடந்த வருடம் முதல் ப்ரோ வெர்ஷன் போன்கள் சிறப்பாகவும், வேகமாகவும் தயாரிக்கப்பட்டது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பே ஆப்பிள் தனது புதிய ஐபோன் 15-ஐ இந்தியாவில் தயாரிக்க அதன் சப்ளையர்களுக்கு ஆர்டர் கொடுத்தது.
இதன் மூலம் இந்த வருடம் ஆப்பிள் நிறுவனத்தின் Wonderlust நிகழ்ச்சி நடந்து முடிந்து அதிகாரப்பூர்வ விற்பனை நாளில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 சீரியஸ் போன் மக்கள் கையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
ஆப்பிள் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் அதன் உற்பத்தி 90 சதவீதம் வெளிநாட்டில் தான், தற்போது ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை அடுத்த சீனாவாக பார்க்கும் வேளையில் தமிழ்நாட்டில் இருக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் தமிழ்நாட்டு ஊழியர்கள் தயாரித்த ஐபோன் 15 சீரியஸ் போன்கள் விற்பனைக்கு வரலாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் Wonderlust நிகழ்ச்சியில் வழக்கம் போல் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போன்கள் வெளியாகும். இந்த முறை லைட்னிங் போர்ட் இல்லாமல் USB-C சார்ஜிங் மற்றும் A17 பயோனிக் சிப் உடன் ப்ரோ மாடல்கள் வரும் என எதிர்பார்ப்பு உள்ளது.
இதோடு ஆப்பிள் வாட்ச் பிரிவில் வாட்ச் சீரியஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஏர்பாட்ஸ் ப்ரோ அறிமுகம் செய்யப்பட உள்ளது, இதுவும் USB-C சார்ஜிங் உடன் வரும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications