இன்று நம்முடைய வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் ஒரு அங்கமாக மாறியுள்ள நிலையில், ஸ்மார்ட்போன் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 12 பல வியப்புகளைக் கொடுத்தாலும், சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது அனைத்தும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் பிரச்சனையாக இருந்தாலும் ஐபோன் 12 முதலீட்டாளர்களுக்கும் சில கசப்பான அனுபவத்தைக் கொடுத்துள்ளது.
ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ ஆகிய இரண்டு புதிய போன்களின் அறிமுகம் ஆப்பிள் பொருட்களின் ரசிகர்களுக்குத் தீனி போட்டு இருந்தாலும், எப்போதும் போலவே வியக்க வைக்கும் அளவிற்குக் கேமரா, 5ஜி தொழில்நுட்பம் எனப் பலவற்றை அறிமுகம் செய்துள்ளது. இதேவேளையில் 1.15 லட்ச ரூபாய் போட்டு யார் இந்தப் போனை வாங்குவது என்ற கருத்து நிலவுகிறது.
இப்புதிய ஐபோன் 12ல் சார்ஜர் இல்லாமல் இருப்பது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதேபோல் 2013ஆம் ஆண்டில் இருந்து எப்போதும் செப்டம்பர் மாதம் புதிய போனை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம் இந்த வருடம் கொரோனா காரணமாக விர்ச்சுவலாகச் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது.
இந்த ஒரு மாத கால தாமதத்தால் ஏற்பட்டும் வர்த்தகப் பாதிப்பு அதிகளவில் இருக்கும் என்ற கணிப்புகளும், ஐபோன் 12ல் சார்ஜர் இல்லாமல் இருப்பதும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பைக் குறைத்தது.
100 பில்லியன் டாலர்
ஆப்பிள் நிறுவனம் ஒரு மாத தாமதமாக ஐபோனை அறிமுகம் செய்த காரணத்தால், ஐபோனுக்குப் போட்டியாகப் பல புதிய மாடல் போன்கள் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதனால் மக்கள் இக்காலகட்டத்தில் பிற போன்களை வாங்கியுள்ளதாகவும், இதனால் ஐபோன் 12 சீரியஸ் போன் விற்பனை அதிகளவில் பாதிக்கும் எனக் கருத்து நிலவியது.
இதன் படி கடந்த 2 வருடத்தில் மோசமான ஐபோன் விற்பனையை ஆப்பிள் நிறுவனம் இந்தச் செப்டம்பர் காலாண்டில் பதிவு செய்துள்ளது.
5 சதவீதம் சரிவு
செப்டம்பர் காலாண்டில் ஏற்பட்டுள்ள வர்த்தகச் சரிவால் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் சுமார் 5 சதவீத சரிவை எதிர்கொண்டது. இதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர் சரிவடைந்து அதிர்ச்சி கொடுத்தது.
இந்த மாபெரும் சரிவால் முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் ஆப்பிள் நிறுவனமும் செய்வது அறியாமல் குழப்பத்தில் மூழ்கியுள்ளது.
வர்த்தகம் பாதிப்பு
ஒரு மாத கால தாமதத்தால் வெளிநாடுகளுக்கு விற்பனைக்காகச் செல்லும் ஐபோன் தாமதமாகியுள்ளது. இதனால் டிசம்பர் காலாண்டில் தான் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ ஆகிய போன்களின் வர்த்தகம் மற்றும் மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு குறித்து முழுமையாகத் தெரியும்.
செப்டம்பர் காலாண்டில் மேக் மற்றும் ஏர்பாட் விற்பனை அதிகரித்திருந்தாலும், ஐபோன் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் 20.7 சதவீதம் குறைந்து 26.4 பில்லியன் டாலர் மட்டுமே கிடைத்துள்ளது.
சீன வர்த்தகம்
ஐபோன் 12 சீரியஸ் போன்களின் முக்கிய அம்சமே 5ஜி சேவைகள் தான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விடவும் அதிகளவில் 5ஜி சேவை தளத்தைக் கொண்டுள்ள சீனாவில் இந்த ஒரு மாத தாமதம் பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 12க்குப் போட்டியாகச் சீனாவில் ஹூவாய் புதிதாக மேட் 40 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் காலாண்டு
செப்டம்பர் 26 உடன் முடிந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த வருவாய் 64.7 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் ஒரு பங்கிற்கு 73 சென்ட் வருமானத்தைக் கொடுத்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications