உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள், டேட்டா சென்டர்களில் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருளை இயக்குவதற்காகத் தனது சொந்த சிப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
மொபைல் சந்தையிலும், சாப்ட்வேர் சந்தையிலும் ஆப்பிள் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து இழந்து வருகிறது. குறிப்பாக ஏஐ துறையில் இன்னும் கால்தடம் பதிக்காமல் உள்ளது ஆப்பிள், சமீபத்தில் ஆப்பிள் ஸ்விஸ் நாட்டின் ஒரு ரகசிய திட்டத்தை தீட்டி வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் உலகமே AI பக்கம் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், சிப் தயாரிப்பில் நீண்ட காலம் அனுபவம் கொண்ட ஆப்பிள், என்விடியாவின் சந்தை ஆதிக்கத்தை உடைக்க டேட்டா சென்டர்களில் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருளை இயக்குவதற்காக தனது சொந்த சிப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
"Project ACDC (Apple Chips in Data Center)" என்ற பெயரில் ஆப்பிள் நிறுவனத்திற்குள் அறியப்படும் இந்த திட்டம், ஆப்பிள் நிறுவனத்தின் சர்வர் கட்டமைப்புக்கான சிப் வடிவமைப்பு திறனைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், டேட்டா சென்டர்களின் செயல்திறனை மேம்படுத்துவதை ஆப்பிள் இலக்காக கொண்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட்கள் மற்றும் மேக் லேப்டாப்புகளில் பயன்படுத்தப்படுவது இந்நிறுவனத்திற்காக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர் சிப் வெற்றியின் காரணமாக, ஆப்பிள் நிறுவனம் உலகின் முன்னணி சிப் வடிவமைப்பாளராக உருவெடுத்துள்ளது.
இதன் நீட்சியாக Project ACDC என்ற புதிய திட்டத்தை உருவாக்கி பணியாற்றி வருகிறது. ஆப்பிள் நிறுவனம் கடந்த 5 வருடத்தில் பல திட்டங்களை கைவிட்டு உள்ளது, இதில் முக்கியமான ஆப்பிள் கார் திட்டம்.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த சர்வர் சிப், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காக (training) அல்லாமல், மாறாக அவற்றை இயக்குவதற்காக (inference) கவனம் செலுத்தக்கூடும்.
செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயிற்றுவிப்பதில் உதவும் சிப்-களை தயாரிப்பதிலும், விற்பனை செய்வதிலும் தற்போது வரை Nvidia நிறுவனமே முன்னிலை வகிக்கிறது. இதனால் என்விடியா உடன் போட்டிப்போடாமல் தனியாக டிராக்கில் செல்ல உள்ளது.


Click it and Unblock the Notifications