ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆப்பிள் நிறுவனமும் தற்போது தனது "ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்" தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அடுத்த சில நாட்களில் வெளியிட தயாராகி வருகிறது. இந்த AI வசதி ஆப்பிள் சாதனங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுவனம் "bug bounty" என்ற திட்டத்தை துவங்கியுள்ளது.
அதேபோல இந்தத் திட்டத்தின் மூலம் ஆப்பிள் சர்வர்களை ஹேக் செய்யும் நபருக்கு 1 மில்லியன் டாலர் பரிசளிக்க உள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ.8 கோடி ரூபாய்.

தங்களுடைய ப்ரைவேட் கிளவுட் கம்ப்யூட்டிங் இயங்குதளத்தில் உள்ள பாதிப்புகளை அடையாளம் காணவும், அதன் புதிய சேவைக்கு வலுவான பாதுகாப்பை வழங்கவும் இத்தகைய அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற வேர்ல்ட் வைட் டெவலப்பர் கான்ஃபரன்ஸில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த AI தொழில்நுட்பத்தின் மூலம் Siri-ஐ மேம்படுத்தவும், ஒரு சாதனத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது இணைய மோசடிகள் அதிகரித்துவிட்ட காரணத்தினால், ஆப்பிள் நிறுவனம் இதற்கு எதிராக தங்களால் முடிந்தவரை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்வர்களில் உள்ள சிக்கல்களை யாராவது கண்டறிந்தால் அவர்களின் முயற்சிகளுக்கு கணிசமான ரிவார்டுகளை வழங்கவும் ஆப்பிள் நிறுவனம் தயாராக உள்ளது.
ஆப்பிளின் பக் பவுண்டி திட்டம்: ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-இன் குறைபாடுகளை கண்டறிய ஆப்பிள் நிறுவனம் தனது ப்ரைவேட் கிளவுட் கம்ப்யூட்டிங் (PCC) உள்கட்டமைப்பை நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு திறந்து வைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பங்கேற்பாளர்கள் PCC-யின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்து அதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை நிறுவனத்திடம் தெரிவிக்கலாம்.
பக் பவுண்ட்டி திட்டத்தின் கீழ் ரிவார்டு வழங்க ஆப்பிள் நிறுவனம் கண்டறியக்கூடிய பாதிப்புகளை 3 முக்கிய பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பகுதியும் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கும் சிக்கலில் உள்ள ஆபத்து மற்றும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டேட்டா லீக்: PCC-இல் உள்ள கட்டமைப்பு அல்லது வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளால் டேட்டாவை வெளிப்படுத்தும் பாதிப்புகளை யாரவது கண்டறிந்தால் அவர்களுக்கு ஆப்பிள் அதிகபட்சமாக $250,000 வரை ரிவார்ட் வழங்குவாதாகத் தெரிவித்துள்ளது.
பயணர்களின் கோரிக்கைகளில் சிக்கல்: பயணர்களின் கோரிக்கையை பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத அணுகல் இருப்பதை யாராவது கண்டுபிடித்தால் அவர்களுக்கு ரூ.1 மில்லியன் ரிவார்ட் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications