ஸ்மார்ட் போன் உலகில் உச்சத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம், அதன் வாய்ஸ் அசிஸ்டென்ட்டான 'சிரி' (Siri) விஷயத்தில் மற்ற நிறுவனங்களை விட பின்தங்கிவிட்டது. இதை சரிகட்ட, ஆப்பிள் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. தனது சிரி-க்கு அதிக சக்தியைக் கொடுக்க, கூகுளின் மிகவும் சக்திவாய்ந்த 'ஜெமினி' (Gemini) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆப்பிள் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்காக ஆப்பிள் நிறுவனம் கூகுளுக்கு ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8,300 கோடி) கொடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓப்பன் ஏஐ-யின் சாட்ஜிபிடி (ChatGPT), கூகுளின் ஜெமினி போன்றவை மிக வேகமாக முன்னேறிவரும் நிலையில், ஆப்பிள் தன் சொந்த AI தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்த 'ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்' அம்சங்களை உடனடியாக கொண்டுவர கூகுளின் தொழில்நுட்பத்தை நம்ப வேண்டிய நிலை ஆப்பிளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜெமினியால் சிரிக்கு என்ன லாபம்..?:இந்த ஒப்பந்தம் ஆப்பிளுக்கும் கூகுளுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஆப்பிள் இப்போது AI மூலம் சிக்கலான கேள்விகளுக்குப் பதிலளிப்பது, நீண்ட தகவல்களை சுருக்கிக் கூறுவது மற்றும் பல கட்டளைகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றுவது போன்ற மிகச் சிறப்பான திறன்களை ஜெமினி மூலம் உடனடியாக பெறுகிறது.
இதில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆப்பிள் பயனர்களின் தனியுரிமைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று ஆப்பிள் உறுதியளித்துள்ளது. கூகுளின் ஜெமினி தொழில்நுட்பம், ஆப்பிளின் மிகவும் பாதுகாப்பான கிளவுட் சர்வர்களில் (Private Cloud Compute servers) மட்டுமே இயங்கும். அதனால், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை கூகுளால் அணுக முடியாது. இந்த மேம்படுத்தப்பட்ட புதிய 'சிரி', அடுத்த iOS 26.4 அப்டேட்டில் (2026) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது நிரந்தரமா..? அல்லது தற்காலிகமா..?:ஆப்பிள் தனது AI கூட்டணியை கூகுளுடன் அமைத்ததற்குப் பின்னால் ஒரு பெரிய காரணம் உள்ளது. ஏற்கனவே, ஆப்பிள் போன்கள், ஐபேட் போன்றவற்றில் கூகுளை தேடுபொறியாக வைக்க, கூகுள் ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலரை ஆப்பிளுக்கு செலுத்தி வருகிறது. இந்தப் பழைய உறவு காரணமாகவே, ஓப்பன் ஏஐ போன்ற மற்ற நிறுவனங்களை விடுத்து கூகுளை ஆப்பிள் தேர்ந்தெடுத்துள்ளது.
ஆனால், இந்த ஒப்பந்தம் ஒரு குறுகிய கால ஏற்பாடு மட்டுமே என்று இந்த துறை வல்லுநர்கள் சொல்கிறார்கள். ஆப்பிள் நிறுவனம், தங்கள் சொந்த AI தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 2026ஆம் ஆண்டுக்குள் ஆப்பிளின் சொந்த AI தொழில்நுட்பம் தயாராகிவிடும் என்றும், அது திறமை வாய்ந்ததாக மாறியவுடன், ஆப்பிள் இந்த ஜெமினி ஒப்பந்தத்தை முழுமையாக நிறுத்திவிட்டு, தங்கள் சொந்த AI-க்கு மாறிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், இப்போது ஜெமினி இணைந்திருப்பதால், சிரி-யின் செயல்பாடுகள் சாட்ஜிபிடி போன்ற முன்னணி AI அசிஸ்டென்ட்டுகளுக்கு இணையாக உயரும் என்று ஆப்பிள் நம்புகிறது.
More From GoodReturns

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications