உலகின் முன்னணி ஐபோன் பிராண்டான ஆப்பிள் நிறுவனத்தின் முழு கவனமும் தற்போது இந்திய சந்தை மீது தான் உள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய ஐபோன் விற்பனையும் ஐபோன் உற்பத்தியும் மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய அதே வேளையில் அதிக லாபம் பார்க்கக்கூடிய ஒரு சந்தையாக இந்தியா மாறி இருக்கிறது.
இந்தியாவில் மேலும் தங்களின் இருப்பை வலுப்படுத்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஒரு தொழிலில் கால் பதிப்பதற்கு முடிவு செய்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கூகுள் பே , போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. மக்கள் தற்போது எங்கு சென்றாலும் கையில் பணத்தை கொண்டு செல்ல வேண்டிய தேவையை இது குறைத்துவிட்டது.

நம் போனை கையில் வைத்திருந்தால் போது எங்கிருந்தாலும் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பும் வாய்ப்பினை யுபிஐ செயலிகள் ஏற்படுத்தி தந்துள்ளன. பெரும்பாலான மக்கள்ன் யுபிஐ வாயிலாகவே பண பரிமாற்றங்களை மேற்கொள்கின்றனர். வயதானவர்கள் கூட பயன்படுத்தும் வகையில் இது எளிதாக இருப்பதே இதற்கு காரணம்.
அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் யுபிஐ சேவையை வழங்குவதற்கு முடிவு செய்து இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் பே எனும் செயலியை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் ஐசிஐசிஐ , ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் போன்ற வங்கிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாக இருக்கிறது.

குறிப்பாக இந்த ஆண்டின் பிற்பகுதியிலேயே ஆப்பிள் பயனர்களுக்கு இந்த செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆப்பிள் செயலி தற்போது இந்தியர்கள் பயன்படுத்தக்கூடிய கூகுள் பே ,பேடிஎம் போன்ற செயலிகளை விட வேகமாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்பக்கூடிய ஒரு செயலியாக இருக்கும் வகையில் திட்டமிடப்படுகிறது. மாஸ்டர் கார்டு, விசா கார்டு போன்ற நிறுவனங்களுடனும் ஆப்பிள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
இந்தியாவில் தற்போது அதிகமானவர்கள் பயன்படுத்தக்கூடிய யுபிஐ செயலிகளாக கூகுள் பே , போன் பே உள்ளிட்டவை இருக்கின்றன. கூகுள் பே ஆல்ஃபாபெட் நிறுவனத்திற்கு சொந்தமானது , போன் பே வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமானது, அமேசான் பே அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமானது. பேடிஎம்., பீம் யுபிஐ போன்றவை உள்நாட்டு தயாரிப்புகள். ஏற்கனவே இந்திய யுபிஐ சந்தையில் அமெரிக்க நிறுவனங்களின் செயலிகள் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய நிலையில் தற்போது ஆப்பிளும் இந்த தளத்தில் கால் பதிக்க முன் வந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications