இந்தியாவில் கம்பியூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளின் ஏற்றுமதியை அதிகரித்த மத்திய அரசு சிறப்பு உற்பத்தி சலுகை கொண்ட திட்டத்தைச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவின் முன்னணி ஸ்மார்ட்போன் மற்றும் கம்பியூட்டர் விற்பனை நிறுவனமான ஆப்பிள், ஏற்கனவே இந்தியாவில் ஐபோன் தயாரித்து வரும் நிலையில் புதிதாக ஐபேட் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது.
2020ல் மோடி தலைமையிலான மத்திய அரசு சுமார் 6.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்மார்ட்போன் ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தியை மேம்படுத்தி அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் பிரச்சனையைச் சமாளிக்க ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருக்கும் தனது உற்பத்தி தளத்தைத் தனது கூட்டணி உற்பத்தி நிறுவனங்களோடு இணைந்து இந்தியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு மாற்றியது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கூட்டணி நிறுவனமான விஸ்திரான் இந்தியாவில் முதலீடு செய்து தொழிற்சாலையை அமைத்து உற்பத்தியைத் துவங்கியுள்ளது.
ஐபோன் தயாரிப்பு
இந்தப் புதிய தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்கத் துவங்கியுள்ளது. சமீபத்தில் விஸ்திரான் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கும் இடையேயான பிரச்சனை வெடித்தது, இந்தப் பிரச்சனைகளைத் தற்போது சரி செய்யப்பட்டு உற்பத்தி பணிகள் துவங்கப்பட்டு வருகிறது.
வியட்நாம் உற்பத்தி
ஆப்பிள் நிறுவனம் தற்போது வியட்நாம்-ல் பாக்ஸ்கான், தைவான் நாட்டின் கோம்பால் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சீனாவில் BYD எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஐபேட் மற்றும் மேக்புக் தயாரிப்புகளைப் பணிகளைச் செய்து வரும் நிலையில், தற்போது ஐபேட் டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்திற்காக அதன் வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியாவில் ஐபேட் உற்பத்தியைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது ஆப்பிள்.
சீன நிறுவனம்
இந்தியாவில் சீனா உற்பத்தி நிறுவனமான BYD நிறுவனத்தை வைத்து ஐபேட் தயாரிக்கத் திட்டமிட்ட ஆப்பிள், இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையின் காரணமாக அனுமதி கிடைப்பதில் தாமதமாகி வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் தனது உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள் ஐபேட் தயாரிக்கப் போகிறது.
3 உற்பத்தி நிறுவனங்கள்
ஆப்பிள் இந்தியாவில் பாக்ஸ்கான், விஸ்திரான், பெகாட்ரான் ஆகிய 3 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் ஐபேட் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. பாக்ஸ்கான் சமீபத்தில் அமேசான் நிறுவனத்தின் பையர் ஸ்டிக் தயாரிப்பைத் துவங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய திட்டம்
மேலும் மத்திய அரசு ஸ்மார்ட் மற்றும் கம்பியூட்டர் பொருட்களைத் தாண்டி Wearable கருவிகள் அதாவது ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்தப் புதிதாக 5000 கோடி ரூபாய் அளவிலான PLI திட்டத்தை உருவாக்கி வருகிறது, அடுத்த 2 மாதத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications