2026 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தியை 40 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதற்கு ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்திருக்கிறார்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் , ஐபேட் உள்ளிட்ட பெரும்பாலான சாதனங்களை சீனாவில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தி செய்துதான் அமெரிக்காவில் இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145% வரி விதிக்கப்பட்டிருப்பதால் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க சந்தைக்கு தேவையான ஐபோன்களை இந்தியாவில் பெரிய அளவில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்வது என முடிவெடுத்திருக்கிறது.

இந்தியாவில் ஏற்கனவே ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஆலைகளை அமைத்து ஐபோன்களை உற்பத்தி செய்து ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கி வருகின்றன. ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய அமெரிக்க சந்தைக்கு தேவையான 80 சதவீத ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்வது என முடிவு செய்திருக்கிறது. 2026 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் 40 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட போன்களை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறதாம்.
தற்போது இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இரண்டு நிறுவனங்களும் 14 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட போன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 11 மில்லியன் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் சராசரி விற்பனை விலை 1100 டாலர்கள் அப்படி என்றால் இதன் மொத்த மதிப்பு 12.1 மில்லியன் டாலர்கள் ஆகும.
அமெரிக்க சந்தைக்கு தேவையான 80 சதவீத போன்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வது மற்றும் இந்தியாவிற்கு தேவையான 100 சதவீத போன்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பது என ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் மேலும் ஆர்டர்களை வழங்கும். இதனால் இந்தியாவில் அந்த நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்க செய்யும். இதற்காக அவர்கள் கூடுதலாக ஆலைகளை நிறுவுவார்கள் அது மட்டும் இன்றி புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வார்கள். எனவே ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவு இந்தியாவிற்கும் இந்திய உற்பத்தி துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரிய சாதகமாக அமைந்திருக்கிறது.
இதற்கு முன்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் எல்லாம் இந்திய நாட்டு சந்தை மட்டும் இல்லாமல் ஐரோப்பா, துருக்கி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தான் ஏற்றுமதி செய்யப்பட்டது. வரிவிதிப்பு நடவடிக்கையால் தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான போன்கள் அமெரிக்காவிற்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் இதற்காக தன்னுடைய உற்பத்தியை அதிகரிக்க இருக்கிறது.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் 45 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்திருக்கிறது. சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்த 20 சதவீத போன்கள் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் 15 மில்லியன் போன்கள் அமெரிக்க சந்தைக்கும் 13 மில்லியன் போன்கள் மற்ற நாடுகளுக்கும், 12 12 மில்லியன் போன்கள் இந்திய சந்தையிலும் விற்பனையாகி இருக்கின்றன.
டாடா நிறுவனத்திற்கு சொந்தமாக ஓசூரில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலையில் ஏற்கனவே ஐபோன் உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஃபாக்ஸ்கான் சென்னை மட்டுமில்லாமல் பெங்களூரில் புதிதாக ஒரு உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஒரு முறை சார்ஜ் போட்டா 40 மணி நேரம் நீடிக்கும்: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐபோன் 18..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications