ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேரை இந்தியாவில் தனது வெண்டார்கள் மூலம் வேலைக்கு அமர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இப்போது ஆப்பிள் வெண்டார்கள் மற்றும் சப்ளையர்கள் 1.5 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
ஆப்பிள் நிறுவனத்தின் இரு ஆலைகளை நடத்தி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மிகப் பெரிய வேலை தரும் நிறுவனமாக உள்ளது. இந்தியாவில் ஆட்தேர்வை ஆப்பிள் நிறுவனம் அதிகரித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 லட்சம் பேரை தனது வெண்டார்கள் மற்றும் சப்ளையர்கள் மூலம் வேலைக்கு அமர்த்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் ஆப்பிள் தனது உற்பத்தியை அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளுக்குள் 5 மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 40 பில்லியன் டாலர்கள் வருவாயை அடைய இலக்கு வைத்துள்ளது.
பலவிதமான ஐபோன்களை தயாரித்து வருவதால் ஆப்பிள் போன்கள் அதிகளவில் விற்கின்றன. விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோன்கள் அந்த நிறுவனத்துக்கு நிறைய லாபத்தை ஈட்டித் தருகிறது. இந்த நிலையில் நிறுவனத்தை இந்தியாவில் மேலும் விரிவுபடுத்தி உற்பத்தியை பன்மடங்கு உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தான் கூடுதலாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கவுன்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் எனும் மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் தரும் தகவல்படி 2023இல் இந்திய சந்தையில் மிகப் பெரிய லாபத்தை ஈட்டிய நிறுவனமாக முதன்முறையாக உருவெடுத்தது என்று கூறப்பட்டுள்ளது.
சாம்சங் யூனிட்கள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
இந்த ரிசர்ச் நிறுவனத்தின் அண்மைக்கால அறிக்கையில் ஆப்பிள் 10 பில்லியன் யூனிட் கணக்கை தாண்டி விட்டது என்றும் இந்த காலண்டர் ஆண்டில் வருவாயில் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்கள் 2023-24இல் கணிசமாக 12.1 பில்லியன் டாலர்களுக்கு உயர்ந்துள்ளது. 2022-23இல் இது 6.27 பில்லியனாக இருந்தது. இந்த வருவாய் உயர்வு கிட்டத்தட்ட 100 சதவீதமாக உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உருவாக்கிய உற்பத்தி கட்டமைப்புகளில் நேரடியாக 1,50,000க்கும் மேற்பட்ட ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அதிக அளவில் ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நிறுவனமாக ஆப்பிள் திகழ்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் உருவாக்கிய 1.5 லட்சம் வேலைவாய்ப்புகளில் பெரும்பாலானவை 19-24 வயதுடைய முதல் தலைமுறை வேலை தேடுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நேரடி வேலைவாய்ப்புகளைத் தாண்டி 3 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கிளீன் எனர்ஜி உற்பத்தியை விரிவுபடுத்தும் நோக்கத்தில் ஆப்பிள் நிறுவனம், இத்துறை நிறுவனமான கிளீன்மேக்ஸ் உடன் இணைந்து 14.4 மெகாவாட் மின்சார திறன் கொண்ட ஆறு ரூஃப் சோலார் மின்சார உற்பத்தி திட்டங்களில் முதலீடு செய்வதாக ஏப்ரல் 17 ஆம் தேதி அறிவித்தது.
இந்த புதிய சோலார் கட்டமைப்புகள், இந்தியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகங்கள், மும்பை மற்றும் டெல்லியில் தொடங்கப்பட்ட இரண்டு ரீடைல் கடைகளுக்கும் மின்சாரத்தை வழங்கும் என்று அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தெரிவித்துள்ளது.
Story written by: I.jayachandran


Click it and Unblock the Notifications