உலகிலேயே அதிக மதிப்புடைய நாடாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி தளத்தை அமைத்தது மூலம் அதிகப்படியான லாபத்தைப் பார்த்து வந்தது, இதேபோல் தேவைக்கு ஏற்ப உற்பத்தியைக் குறைந்த காலகட்டத்தில் அதிகரித்தும் லாபம் பார்த்தது.
இந்த நிலையில் அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தகப் போர் துவங்கிய நாளில் இருந்து ஆப்பிள் நிறுவனம் மெல்ல மெல்ல சீனாவை விட்டு விலகத் துவங்கியது. அதிலும் முக்கியமாகக் கொரோனா தொற்றுக் காலத்தில் ஆப்பிள் பெரும் பகுதி உற்பத்தியைச் சீனா மற்றும் பிற தெற்காசிய நாடுகளுக்கு மாற்றி வந்தது.
இந்த நிலையில் தற்போது மொத்தமாகச் சீனாவைக் கைகழுவ முடிவு செய்துள்ளது ஆப்பிள்.
சீனா
சீனாவில் கொரோனா தொற்றுக் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் ஆப்பிள் தொழிற்சாலைகளில் தங்க வைக்கப்பட்டு ஊழியர்கள் பணியாற்றினாலும் நிர்வாகத்துடன் நடந்த போராட்டம் மூலம் அதிகளவிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது ஆப்பிள்.
ஆப்பிள்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம் உற்பத்திக்காகச் சீனாவை அதிகளவில் நம்பி இயங்கி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலை Zhengzhou பகுதியில் அமைந்துள்ளது.
உத்தரவு
இந்த நிலையில் ஆப்பிள் இப்போது தனது பெரும்பாலான உற்பத்தி மற்றும் செயல்பாடுகளைச் சீனாவிற்கு வெளியே மாற்ற விரும்புகிறது. இதற்காக ஆப்பிள் நிர்வாகம் அதன் சப்ளையர்களை ஆசியாவின் பிற நாடுகளில் இடங்களில் குறிப்பாக இந்தியா மற்றும் வியட்நாமில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க உத்தரவிட்டு உள்ளது.
இந்தியா
ஆப்பிள் தனது மொத்த உற்பத்தியில் சுமார் 40-45 சதவீத தயாரிப்புகளை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
பாக்ஸ்கான், பெக்ட்ரான், விஸ்ட்ரான்
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே அதன் ஆஸ்தான உற்பத்தி கூட்டணி நிறுவனங்களான பாக்ஸ்கான், பெக்ட்ரான், விஸ்ட்ரான் ஆகியவை இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைத்து ஐபோன் தயாரிக்கும் பணியில் உள்ளது.
ஐபேட்
தற்போது முக்கியமான ஐபேட்-ஐயும் இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்து இந்திய நிறுவனங்களுடனும், இந்திய அரசுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேக் இன் இந்தியா மற்றும் PLI
இந்தியாவில் புதிதாக உற்பத்தி தளத்தை அமைக்கும் நிறுவனங்களுக்கு மேக் இன் இந்தியா மற்றும் PLI திட்டங்கள் மூலம் அதிகளவிலான பலன்களை அளிக்கப்படும் காரணத்தால் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் உற்பத்தியை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு முன்பு இந்திய அரசுடனும் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
விஸ்ட்ரான் தொழிற்சாலை
கர்நாடகாவில் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் இயங்கி வரும் ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரான் தொழிற்சாலையை மொத்தமாக டாடா குழுமம் 4000 - 5000 கோடி ரூபாய் மதிப்பிற்கு வாங்கி ஐபோன் உற்பத்தியை வேகப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக டாடா குழுமத்தின் டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் விஸ்ட்ரான் இந்தியா உடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகச் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ்
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஏற்கனவே ஓசூரில் பிரம்மாண்டமான தொழிற்சாலையைக் கட்டி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் விஸ்ட்ரான் தொழிற்சாலையை வாங்குவது என்பது பெரும் ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. இது வெற்றி அடையும் பட்சத்தில் டாடா எலக்ட்ரானிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் precision engineering பிரிவிலும் சிறந்து விளங்கும்.


Click it and Unblock the Notifications