ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இந்திய ரீடைல் விற்பனைக் கடை இன்று மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஆப்பிள் சிஇஓ நேரில் வந்து திறந்தார்.
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இன்று காலை 28,000 சதுர அடி கொண்ட பிரம்மாண்ட ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்தார். இக்கடைக்குள் நுழைய மக்களும், ஆப்பிள் பிராண்ட் ரசிகர்களும் பல மணிநேரம் காத்திருந்தனர், மக்களின் உற்சாகமான வரவேற்புக்கு மத்தியில் டிம் குக் திறந்து வைத்தார்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது சில்லறை விற்பனைக் கடை வியாழன் அன்று தலைநகர் டெல்லியில் திறக்கப்பட உள்ளது.
மேலும் ஆப்பிள் மும்பை ஸ்டோர்-க்குள் வெவ்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்த பூரவ், மாதவ் மற்றும் கார்த்திக் ஆகியோர் முதல் ஆளாக உள்ளே சென்று ஆப்பிள் வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்தள்ளனர். இக்கடைகளில் முதல் ஆளாக நுழைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இரவு முழுவதும் கடையின் வெளியிலேயே காத்திருந்து உள்ளே சென்றுள்ளனர்.
மேலும், டெல்லி ஆப்பிள் ஸ்டோர் திறப்பு விழாவில் மாதவ் கலந்து கொள்கிறார்.

மும்பை-யில் மிகவும் முக்கியமான பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆப்பிள் ஸ்டோரை திறப்பதற்காக, ஆப்பிள் சிஇஓ டிம் குக் இந்தியாவுக்கு நேரில் வந்துள்ளார். ஆப்பிள் ஸ்டோரின் திறப்பு இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 25 வது ஆண்டு வர்த்தகத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
பாந்த்ரா குர்லா வளாகத்தில் இந்தியாவின் முதல் ஸ்டோர் திறக்கப்பட்ட நிலையில், மற்றொரு ஆப்பிள் ஸ்டோர் டெல்லியின் சாகேட்டில் வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளது. இதையும் டிம் குக் தான் திறந்து வைக்கிறார்.ஆப்பிள் ஸ்டோரின் முக்கிய குறிக்கோள் என்னவென்றால் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு எந்த பிராண்டும் அளிக்காத உயர்தர வாடிக்கையாளர் சேவையை வழங்குவது தான்.
இது மட்டும் அல்லாமல் ஆப்பிள் ஸ்டோரில் ஆப்பிள் பொருட்களை விற்பனை செய்வது முதல் சர்வீஸ், ஆக்சசரீஸ் விற்பனை செய்வது வரையில் அனைத்தும் ஓரே இடத்தில் கொடுப்பது தான் முக்கிய இலக்கு. இதன் அடிப்படையில் தான் டெல்லி ஸ்டோரும் அமைக்கப்பட உள்ளது.
பொதுவாகவே ஆப்பிள் பொருட்களுக்கு பெரிய அளவிலான வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கும், இந்தியாவில் இதேபோன்ற எதிர்பார்ப்பு இருக்குமா என்ற கேள்வி இருந்த நிலையில், ஆப்பிள் ஸ்டோருக்கு முதல் நாளே செல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் குஜராத்தில் இருந்தும் கூட மக்கள் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்-க்கு வந்துள்ளனர்.
இதேபோல் ஆப்பிள் ரசிகர் ஒருவர் தான் 1984 ஆம் ஆண்டு வாங்கிய ஆப்பிள் கம்பியூட்டரை வாங்கியிருந்தார், அதை ஆப்பிள் ஸ்டோர் திறக்கும் நாளில் கொண்டு வந்து டிம் குக்-ஐ ஆச்சரியப்படுத்தினார். அவருடைய ரியாக்ஷனை பாருங்க. 1984 ஆம் ஆண்டு முதல் இவர் ஆப்பிள் பொருட்களை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.




More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications