ஆப்பிள் நிறுவனத்தின் புதிய COO.. இந்தியரான சபீக் கான் நியமனம்.. விரைவில் சிஇஓ-வாக வாய்ப்பு..!!

ஆப்பிள் என்ற பெயரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். கடந்த 1976ஆம் ஆண்டு, ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியக் மற்றும் ரொன் வெய்ன் ஆகியோரால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆப்பிள் நிறுவனம். ஆரம்பத்தில் ஒரு சிறிய கம்ப்யூட்டர் நிறுவனமாக மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால், இன்று உலகளவில் அதிக மதிப்பீடு கொண்ட டிரில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. iPhone, Mac, iPad, Apple Watch போன்ற கருவிகள் டிசைன் செய்து விற்பனை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளது. இந்த சூழலில் தான், இந்நிறுவனத்தில் தற்போது ஒரு அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆப்பிள் (Apple) நிறுவனம், அதன் புதிய தொழில்நுட்ப இயக்க அதிகாரியாக (Chief Operating Officer - COO) இந்திய வம்சாவளியை சேர்ந்த சபீக் கானை நியமித்துள்ளது. இவர், ஆப்பிள் நிறுவனத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது அந்நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளை வழிநடத்தி வருகிறார். தற்போது COO-வாக இருக்கும் ஜெஃப் வில்லியம்ஸ், இம்மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகுகிறார். அவர், இந்தாண்டின் இறுதியில் ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய COO.. இந்தியரான சபீக் கான் நியமனம்.. விரைவில் சிஇஓ-வாக வாய்ப்பு..!!

ஆப்பிள் நிறுவனம் சந்திக்கும் சவால்கள் : புதிய மாடல்களில் உள்ள மாற்றங்களால் விற்பனை பெருமளவு குறைந்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் விதித்த பரஸ்பர வரிவிதிகள் காரணமாக, ஆப்பிளின் தயாரிப்பு செலவுகள் மற்றும் உலகளாவிய விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சபீக் கான், தனது அனுபவத்தையும், திறமையையும் பயன்படுத்தி ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல் நிர்வாகங்களை மேம்படுத்த வேண்டிய கடமையுடன் செயல்பட உள்ளார்.

யார் இந்த சபீக் கான்..?: உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தவர் சபீக் கான். இவர், அமெரிக்காவுக்கு இடம்பெயர்வதற்கு முன்பு தனது பள்ளிப் பருவத்தில் சிங்கப்பூருக்குச் சென்றார். டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் இயந்திர பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து ரென்சீலர் பாலிடெக்னிக் நிறுவனத்தில் (RPI) இயந்திர பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1995ஆம் ஆண்டு ஆப்பிளின் கொள்முதல் குழுவில் இணைவதற்கு முன்பு, பொறியாளராகவும், முக்கிய கணக்கு தொழில்நுட்பத் தலைவராகவும் பணியாற்றினார். ஆப்பிளில், புதுமையான தயாரிப்புகளை வழங்குவதிலும், நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாட்டு உத்தியை வடிவமைப்பதிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். 2019ஆம் ஆண்டு முதல் அவர் ஆப்பிளின் உலகளாவிய விநியோகச் சங்கிலியை வழிநடத்தி, கொள்முதல், திட்டமிடல், உற்பத்தி, தயாரிப்பு போன்ற பணிகளை மேற்பார்வையிட்டார்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய COO ஆக நியமிக்கப்பட்ட சபீக் கான் குறித்து, அந்நிறுவனத்தின் CEO டிம் குக் மற்றும் தற்போதைய COO ஜெஃப் வில்லியம்ஸ் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். "சபீக் ஒரு உன்னதமான யோசனையாளர். அவர் முன்னெடுத்த புதிய தொழில்நுட்பங்கள், அமெரிக்கால் உலுள்ள உற்பத்தி நிலைய விரிவாக்கம் மற்றும் உலக சவால்களுக்கு பதிலளிக்கும் நிறுவன திறனை மேம்படுத்தியுள்ளார்" என்று டிம் குக் புகழாரம் சூட்டினார்.

"27 ஆண்டுகளாக சபீக்குடன் நெருக்கமாக பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. உலகின் மிக திறமையான operations executive அவரே என நம்புகிறேன். இந்த புதிய பதவியில் அவர் ஆப்பிளின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகுந்த self-confidence தருகிறார்" என்று ஜெஃப் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்பிளின் புதிய COO ஆக நியமிக்கப்பட்ட சபீக் கான், நிறுவனத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உலகளாவிய உற்பத்தி மாற்றத்திற்கும் முக்கிய பொறுப்பேற்க உள்ளார். ஆப்பிள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை மேம்படுத்தும் பணிகளையும் அவர் வழிநடத்தவுள்ளார். மேலும், ஆப்பிளின் உலகளாவிய உற்பத்தி மையங்களை இந்தியாவுக்கு திசைமாற்றும் திட்டத்தையும் அவர் வழிநடத்த உள்ளார்.

விரைவில் CEO ஆகிறார் சபீக் கான்..?: ஆப்பிளின் தற்போதைய CEO டிம் குக், கடந்த காலத்தில் Chief Operating Officer (COO) பதவியில் இருந்தவர். அதன்பிறகு, 2011ஆம் ஆண்டு நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸிற்குப் பிறகு CEO ஆக பதவி உயர்வு பெற்றார். இப்போது, அந்த அதே COO பதவிக்கு சபீக் கான் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, எதிர்காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் CEO ஆக சபீக் கான் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+