இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி.. டிம் குக் பெருமிதம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி கண்டு பெருமிதம் அடைவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்கள், லேப்டாப்கள் மற்றும் ஐபேட் விற்பனை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.

இதனையடுத்து இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் உற்பத்தி செய்தும் இப்படியா..ஆப்பிள் நிறுவனத்தால் இந்தியாவுக்கு பலன் தான்! இந்தியாவில் உற்பத்தி செய்தும் இப்படியா..ஆப்பிள் நிறுவனத்தால் இந்தியாவுக்கு பலன் தான்!

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப் இந்திய சந்தையில் சீரான வளர்ச்சியை பெற்று வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐபேட்கள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சேவைகள் இந்தியாவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் பயனாளிகளின் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அதற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய இளைஞர்கள்

இந்திய இளைஞர்கள்

Counterpoint India ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் தருண் பதக் அவர்கள் கூறியபோது ஆப்பிள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகளுக்கான சந்தை இப்போது இந்தியாவில் விரிவுபடுத்த சிறப்பான காலம் என்று கூறியுள்ளார். இந்தியாவில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்திய இளைஞர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் வருவாய்

ஆப்பிள் வருவாய்

இந்தியாவில் மெட்டா, ஆல்பபெட், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் நல்ல வருவாயை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் வெளியான போது அதில் 90.1 பில்லியன் டாலர் வருவாய் என அறிவித்திருந்தது.

டிம் குக்

டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் அவர்கள் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும் மேலும் இந்நிறுவனம் விற்பனையில் சாதனைகள் செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய யூனிட் வருவாய் சாதனையை பதிவு செய்துள்ளதாகவும் கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி முன்னேற்றத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வருவாய் அதிகரிப்பு

வருவாய் அதிகரிப்பு


ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 46 சதவீதம் அதிகரித்து ரூ.33,312.9 கோடியாக இருந்தது. இருப்பினும் நிகர லாபம் 3 சதவீதம் அதிகரித்து ரூ. 1,263 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple saw double-digit revenue growth in India in Sept quarter: Tim Cook

Apple CEO Tim Cook has said that he is proud of the growth of Apple in India. Sales of Apple iPhones, laptops and iPads in India have increased this year, according to statistics. After this, there are reports that Apple is planning to further increase its growth in India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X