இந்தியாவின் முன்னணி மின்சாதன உற்பத்தியாளரான ஆப்பிள் நிறுவனம், மிகப்பெரிய அளவிலான ப்ளூகாலர் வேலைகளை உருவாக்கிய ஒரு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இது குறித்து பிசினஸ் ஸ்டாண்ட்டர்ட் அறிக்கையின் படி, கடந்த 19 மாதங்களில் 1,00,000 புதிய நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அரசாங்கத்தின் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் கீழ் இந்த வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது உள்ளூர் உற்பத்தியினை ஊக்குவித்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
3 ஐபோன்களை அசெம்பிள்
ஐபோன்களை அசெம்பிள் செய்வதற்கான மூன்று விற்பனையாளர்கள், பாக்ஸ்கான் ஹான் ஹை, பெகாட்ரான் மற்றும் விஸ்ட்ரான் 60% புதிய வேலைகளை உருவாக்கியுள்ளன. 1 லட்சம் வேலை வாய்ப்பில் 35,500 பேருக்கு பாக்ஸ்கான் வாய்ப்பளித்துள்ளது.
பெகாட்ரான்
இந்த நிதியாண்டில் உற்பத்தியினை பெகாட்ரான், ஏற்கனவே 14,000 வேலை வாய்ப்புகளுடன் இரண்டாவது பெரிய வேலை வழங்குனராகவும் உருவெடுத்ததுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவே ஆப்பிள் நிறுவனம் பெரியளவிலான வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
பி எல் ஐ திட்டத்தின் மூலம்
ஆப்பிளின் உதிரி பாகங்கள் மற்றும் சார்ஜர்களின் சப்ளையர்கள் உள்பட ஆப்பிளின் மற்ற அமைப்பில் 40,000 பேருக்கு கூடுதலாக வேலை வாய்ப்பாக கிடைத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் பி எல் ஐ திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
பல துறைகளிலும் வேலை
இது ஆப்பிளின் மூன்று உற்பத்தியாளார்கள் மத்தியில் மட்டும் அல்ல, ஆப்பிள் சார்ந்த உதிரிபாகங்கள் உள்பட பல துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
விற்பனையாளர்கள் தொடர்ந்து அரசிடம் வேலை வாய்ப்புகளை கணக்கு காட்ட வேண்டிய நிலையில் உள்ளனர்.
அரசின் திட்டம்
பி எல் ஐ திட்டத்தின் கீழ் அரசு 5 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பினை உருவாக்க திட்டமிட்டிருந்தது. அரசின் இந்த திட்டம் நிச்சயம் பலனளிக்க தொடங்கியுள்ளது என்று தான் கூற வேண்டும். இதுபோன்ற திட்டங்கள் இந்தியாவில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், உற்பத்தியினையும் அதிகரிக்க தூண்டுகின்றன.
நல்ல விஷயம் தான்
ஒரு காலத்தில் இதே பொருட்களை இறக்குமதி செய்த காலம் போய், இன்று அதே பிராண்டினை இறக்குமதி செய்வதை விடுத்து, நமது ஊழியர்கள் மூலம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவிலேயே உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுவதும், ஏற்றுமதி செய்யப்படுவதும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இது மேட் இன் இந்தியா என்ற பெயரினை ஊக்கப்படுத்துவதுடன், இந்தியாவின் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் எனலாம். மேலும் இது இந்தியாவில் வேலை வாய்ப்பினையும் நிச்சயம் அதிகரிக்க வழிவகுக்கலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications