உலகமே எதிர்பார்த்த காத்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் Wonderlust நிகழ்ச்சி நேற்று இரவு 10.30 மணிக்கு துவங்கி வெற்றிகரமாக ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.
பொதுவாக ஆப்பிள் பொருட்களில் புது விதமான தொழில்நுட்பம், சேவைகள் இருக்கும் காரணத்தால் மட்டுமே மக்கள் மத்தியில் அதிகளவில் கவர்ந்து வந்தது. ஆனால் சமீப காலமாக ஆப்பிள் பொருள்களில் சிறிய மாற்றங்கள் மட்டுமே நடக்கும் காரணத்தால் ஆப்பிள் அதன் ஆதிக்கத்தை மெல்ல மெல்ல குறைத்து வருகிறது.

நேற்று நடந்த Wonderlust நிகழ்ச்சியிலும் ஆப்பிள் பொருட்களில் கேமராவில் சிறிய மேம்பாடு, வேகமாக இயங்க கூடிய பிராசசர், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட USB-C சார்ஜிங் மற்றும் வேகமான டேட்டா டிரான்ஸ்பர் சேவை கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதோடு மக்கள் பெரிய அளவில் கவர்ந்த ஒரு விஷயமாக பார்க்கப்படுவது ஆப்பிள் வாட்ச்-ல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் டபுள் டேப் வசதி மற்றும் ஆக்ஷன் பட்டன் சேவை தான். இதேபோல் ஐபோன் 15 ப்ரோ விலை கிட்டதட்ட 100 டாலர் அதிகரிக்கப்பட்டது மூலம் டாப் மாடல் போன் 2 லட்சம் ரூபாயை தொடுகிறது.
மேலும் ஐபோன் 15 ப்ரோ பிரிவில் டைட்டானியம் பாடி புதிய மேம்பாடு கேமராவில் சென்சார் மற்றும் தொழில்நுட்ப அளவில் முக்கிய மேம்பாடு ஆகியவை முக்கியமானதாக இருந்தாலும் ஐபோன் 15 ப்ரோ 128 ஜிபி வெர்ஷன் அறிமுகம் செய்யாதது பெரும் பின்னடைவு.
அனைத்தையும் தாண்டி சீனா அரசு அறிவிக்கப்பட்டு உள்ள தடை அதாவது மத்திய மாநில அரசு ஊழியர்கள் ஐபோன்களை அலுவலகத்திலும், அலுவக ரீதியிலான பணிகளுக்கும் பயன்படுத்த கூடாது என அறிவித்துள்ளது. இதனால் பெரும் வர்த்தக பாதிப்பு ஏற்படும்.

இப்படியிருக்கையில் சீனாவில் சுமார் 19 சதவீத வர்த்தகத்தை கொண்டு இருக்கும் ஆப்பிள் விலையிலோ, புதிய தொழில்நுட்பம் மற்றும் சேவையில் அதிரடி மாற்றங்களையோ கொண்டுவரவில்லை. ஆனால் எலைட் மக்களை கவர Nike மற்றும் Hermes பிராண்டுகள் உடனான கூட்டணியில் புதிய வாட்ஸ் ஸ்டிராப் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது.
இந்த முறை ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் மற்றும் ஐபோன் அறிமுகம் வர்த்தகத்தை பெரிய அளவில் உயர்த்தாது என்பதை கணித்த அமெரிக்க முதலீட்டாளர்கள் Wonderlust நிகழ்ச்சிக்கு பின்பு 1.71 சதவீதம் சரிந்து 176.30 டாலராக குறைந்தது. இதன் மூலம் பல பில்லியன் டாலர் மத்தியிலான சந்தை மதிப்பு இழந்ததுள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications