இந்தியாவில் கிரெடிட், டெபிட் கார்டு பரிவர்த்தனையை ஏற்க முடியாது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது, வாடிக்கையாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிள் ஐபோன், ஐபாட் வாடிக்கையாளர்கள் அவற்றைப் பயன்படுத்த வங்கி விவரங்களை அளித்து ஆப்பிள் ஐடி உருவாக்க வேண்டும். மேலும் ஆப்பிளின் பல்வேறு செயலிகளை கிரெடிட், டெபிட் யூபிஐ அல்லது ஆன்லைன் வங்கி சேவை மூலம் கட்டணம் செலுத்திதான் பயன்படுத்த முடியும்.
ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் கிரெடிட், டெபிட் கார்டுகளில் இருந்து ஆட்டோ டெபிட் செய்யும் முறையில் கட்டுப்பாடுகளை வைத்தது. அதன்மூலம் ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் அனுமதியுடன் தான் பணம் ஆட்டோ டெபிட் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
ஆப்பிள்
ஆர்பிஐ விதித்த அந்த உத்தரவால் இனி இந்தியாவில் கிரெடிட், டெபிட் கார்டு பரிவர்த்தனையை ஏற்கப்போவதில்லை என்ற முடிவை ஆப்பிள் எடுத்துள்ளது. ஏற்கனவே இணைக்கப்பட்ட கணக்குகளிலும் விரைவில் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்த முடியாது என வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.
மாற்று வழி என்ன?
எனவே ஆப்பிள் செயலிகள் சந்தாவைச் செலுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் இனி ஆப்பிள் ஃபண்ட்ஸ் செயலியில் பணத்தை ஏற்ற வேண்டும். யுபிஐ, இணையதள வங்கி சேவை மூலம் பணத்தை ஏற்றலாம். அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஆப்பிள் நிறுவனம் பணத்தை பிடித்தம் செய்துகொள்ளும் என கூறப்படுகிறது.
புகார்கள்
பல ஆப்பிள் போன் வாடிக்கையாளர்கள் தங்களது ஆப்பிள் ஐடியில் பிழை ஏற்பட்டுள்ளது. சந்தா கட்டணங்களைச் செலுத்த முடியாமல் உள்ளனர் என புகார்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
டேப் டூ பே
பிப்ரவரி மாதம் ஐபோனில் டேப் டூ பே என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது. அதன் மூலம் ஐபோனை பயன்படுத்தி ஆட்டோ பேமெண்ட் பரிவர்த்தனையைச் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. வைஃபை ஆர்டு வசதி உள்ள பிஓஎஸ் இயந்திரங்களில் ஐபோனை டேப் செய்து பணத்தைச் செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் இவற்றுக்கு ஆப்பிள் ஃபண்ட்ஸ் செயலியில் பணம் இருக்க வேண்டும்
பிரச்சனை
ஆப்பிள் ஃபண்ட்ஸில் பணத்தைக் குறைந்தது 5000 ரூபாய் முதல் சேர்க்க முடியும் என்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமுக வலைத்தளங்கள் மூலம் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications