ஆப்பிள் நிறுவனத்தின் முன்னணி சப்ளையரான பாக்ஸ்கான், ஏற்கனவே இந்தியாவில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை செய்துள்ளது. பல இடங்களில் ஆலைகளை கொண்டுள்ளது. இன்னும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு வருகின்றது.
குறிப்பாக தமிழக்கத்தில் சென்னை மற்றும் ஓசூரில் முதலீடு செய்துள்ள பாக்ஸ்கான், கர்நாடகாவிலும் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை செய்துள்ளது.
ஏற்கனவே ஆப்பிள் உதிரி பாகங்கள், ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் உற்பத்தி என பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
விரிவாக்கம்
தாய்வானை சேர்ந்த முன்னணி உற்பத்தியாளரான பாக்ஸ்கான் சீனாவினை தாண்டி, தற்போது பல்வேறு நாடுகளில் விரிவாக்கம் செய்து வருகின்றது. குறிப்பாக மிகப்பெரிய சந்தையான இந்தியாவினை பயன்படுத்திக் கொள்ள தொடர்ந்து விரிவாக்கம் செய்தும் வருகின்றது. இது ஆப்பிள் பொருட்கள் உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி என அனைத்தையும் இங்கேயே உற்பத்தி செய்து விற்பனை செய்வதோடு, ஏற்றுமதியினையும் அதிகரிக்க பயன்படலாம்..
முதலீட்டு திட்டம்
இதற்கிடையில் தற்போது ஆப்பிளின் ஏர்போட்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் மேற்கொண்டு 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய ஆலை ஒன்றை கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஆலையில் குறிப்பாக வயர்லெஸ் ஏர்போன்கள் உற்பத்தி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாக்ஸ்கானுடன் ஒப்பந்தம்
ஆப்பிள் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தினை தனது ஐபோன்களின் 70% அசெம்பிள் செய்யும் ஒப்பந்ததாரரான, பாக்ஸ்கானுடன் கூட்டணி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது ஆப்பிள் ஐபோன் மற்றும் ஆப்பிள் உதிரி பாகங்கள் சப்ளையராக இருந்த பாக்ஸ்கான், இதன் பிறகு ஆப்பிள் ஏர்போன் சப்ளையராகவும் உருவெடுக்கலாம்.
சீனாவினை தாண்டி வெளியே
ஆப்பிளின் இந்த முயற்சி சீனாவினை முழுமையாக நம்பியிருக்காமல் இருக்க, விரிவாக்கம் செய்யப்படும் ஒன்றாக இருக்கலாம் என தெரிகின்றது. தற்போது சினாவின் முக்கிய சப்ளையர்கள் தான் ஏர்போட்களையும் சப்ளை செய்து வருகின்றனர்.
பாக்ஸ்கான் ஆர்வம்?
இது தகவல்கள் உண்மையா? அல்லது பொய்யா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் பாக்ஸ்கான் ஆப்பிளின் புதிய புதிய பொருட்களை உற்பத்தி செய்வதில் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிகின்றது.
பாக்ஸ்கான் மட்டும் அல்ல, தாய்வானின் விஸ்ட்ரான் கார்ப் மற்றும் பெகட்ரான் கார்ப் நிறுவனங்கள், ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து பல புதிய ஆர்டர்களை பெற்று வருகின்றன.
தெலுங்கானாவில் ஆலை பணி
பாக்ஸ்கானின் துணை நிறுவனமான பாக்ஸ்கான் இண்டர்கனெக்ட் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம், தெலுங்கானாவில் ஆலை அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகின்றது. இந்த பணியானது 2024ன் இறுதியில் முடிவடையலாம் என தெரிகின்றது.
சீனா பிரச்சனையால்
சீனாவின் சமீபத்திய ஆண்டுகளாகவே கொரோனாவால் பெரிதும் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், பாக்ஸ்கான் நிறுவனம் மிகப்பெரிய ஆலையை கடந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கியது. இது உற்பத்தி பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க தொடங்கியது. எது எப்படியோ இதன் மூலம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது அதிகரிக்கலாம் என்பது நல்ல விஷயமே.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications