உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள்-ன் மிகப்பெரிய சீன உதிரிபாக உற்பத்தியாளர்களில் ஒன்றான லக்ஸ்ஷேர் (Luxshare), இந்தியா - சீனா மத்தியிலான அரசியல் பதற்றத்தைக் காரணம் காட்டி தனது முதலீட்டை இந்தியாவிற்குப் பதிலாக வியட்நாமில் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அரசின் சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போர் நடந்து வந்த காலத்தில் சீனாவில் இருந்து பல அமெரிக்க நிறுவனங்கள் குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையர்கள் இந்தியாவுக்குத் தனது உற்பத்தி தளத்தை மாற்றினர். இந்த நிலையில் இந்திய எல்லையில் சீனா ராணுவம் நுழைந்தது மூலம் இந்தியா சீனாவின் முதலீட்டில் இருந்து சீனர்கள் இந்தியாவுக்கு வருவது வரையில் பல கட்டுப்பாடுகளை வித்தது.

இதனால் இந்தியாவில் சீனா முதலீடுகள் பெரிய அளவில் குறைந்தது மட்டும் அல்லாமல் சீன டெக்னிஷன்கள் இந்தியாவுக்கு வருவது கூடக் கடினமாகியுள்ளது. இந்த நிலையில் எல்லை பிரச்சனை குறித்து இந்திய - சீனா மத்தியிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் உறுதியான முடிவு இன்னும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் தான் லக்ஸ்ஷேர் நிறுவனம் இந்தியாவில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான பல முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வியட்நாமில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது எனப் பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்போட்ஸ் தயாரிப்புக்கு முதன்மை சப்ளையராக லக்ஸ்ஷேர் விளங்குகிறது. தற்போது ஐபோன்களுக்கான முக்கியச் சப்ளையராக மாறவும் முயற்சி செய்யும் நிறுவனமாக உள்ளது, இப்படியிருக்கையில் இந்தியாவில் விரிவாக்கம் செய்ய முடியாமல் வியட்நாம்-ல் 330 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
லக்ஸ்ஷேர் நிறுவனத்தின் அறிக்கைப் படி, இந்நிறுவனம் 330 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை வியட்நாம் நாட்டின் வடக்கு மாகாணமான Bac Giang-ல் செய்து உதிரிப்பாகங்களைத் தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்புதலை வியட்நாம் அரசு கொடுத்துள்ள வேளையில் லக்ஸ்ஷேர்-ன் மொத்த வியட்நாம் முதலீடு தற்போது 504 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications