ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி தளத்தைச் சீனாவில் இருந்து இந்தியா மற்றும் பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்றுவது குறித்து அதிகப்படியான குழப்பத்தில் இருந்தது.
இதற்கிடையில் தான் சீனாவின் மிகப்பெரிய ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில், தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கும் மத்தியிலான பிரச்சனையில் தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.
இதனால் இந்த மாபெரும் தொழிற்சாலையில் உற்பத்தி குறைந்து உலகம் முழுவதும் நடக்கும் விடுமுறை விற்பனைக்குப் போதுமான ஐபோன்கள் இல்லாமல் ஆப்பிள் நிர்வாகம் தவிக்கிறது.
சீனாவின் தொழிற்சாலை பிரச்சனைக்குப் பின்பு ஆப்பிள் தனது பெரும்பாலான உற்பத்தியை இந்தியாவுக்குத் திருப்ப உறுதியான முடிவு செய்து அதற்கான பணிகளில் தற்போது இறங்கியது.
இதன் ஒரு பகுதியாக ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையர் நிறுவனம் உத்தரப் பிரதேசத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை வைத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் தனது பெரும் பகுதி உற்பத்தியை இந்தியாவுக்குத் திருப்ப முடிவு செய்த நிலையிலும், ஏற்கனவே இந்தியாவின் ஆப்பிளின் முக்கியச் சப்ளையர்களான பாக்ஸ்கான், பெகாட்ரன், விஸ்ட்ரான் ஆகியவை இந்தியாவில் செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக 4வது ஒரு நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டுக் களத்தில் இறங்கியுள்ளது.
ஆப்பிள் சப்ளையர்கள்
இந்த நிலையில் ஆப்பிள் சப்ளையர்கள் சிலர் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதற்காக நிலத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தொழிற்சாலைக்காகச் சுமார் 2,800 கோடி ரூபாய் முதலீடு செய்தது, ஆயிரக்கணக்கானோர்-க்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கு உள்ளதாக யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) புதன்கிழமை தெரிவித்தது.
2,800 கோடி ரூபாய் முதலீடு
ஆப்பிள் சப்ளையர்கள் மற்றும் கேமரா உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்துடன் சேர்ந்து சுமார் 23 ஏக்கர் நிலத்தில் 2,800 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு பெரிய தொழிற்சாலையை அமைக்க ஆர்வம் காட்டியுள்ளது எனப் பெயர் விபரங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் YEIDA அந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கிரேட்டர் நொய்டா
இந்த நிறுவனங்கள் ஏற்கனவே கிரேட்டர் நொய்டாவில் வரவிருக்கும் ஜெவார் விமான நிலையத்திற்கு அருகில் யமுனா ஆணையத்தின் கீழ் செக்டார் 29ல் நிலத்திற்கான 10 சதவீத தொகையை டெபாசிட் செய்துள்ளன என யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் சிஇஓ அருண் வீர் சிங் தெரிவித்துள்ளார்.
செய்கோ அட்வான்ஸ் லிமிடெட்
மை உற்பத்தி நிறுவனமான செய்கோ அட்வான்ஸ் லிமிடெட், YEIDA-வின் செக்டார் 29ல் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் தனது தயாரிப்பைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தது. Seiko அட்வான்ஸ் லிமிடெட் மட்டும் 850 கோடி ரூபாய் முதலீடு செய்து ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளது.
190 ஆப்பிள் சப்ளையர்கள்
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் ஐபோன் உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் சுமார் 190 ஆப்பிள் சப்ளையர்கள் உள்ளனர், ஆனால் இந்தியாவில் இப்போது 12 பேர் மட்டுமே உற்பத்தி தளத்தைக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு
இந்தியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் 12 சப்ளையர்களில் ஐந்து பேர் தமிழ்நாட்டில் உள்ளனர் ஃப்ளெக்ஸ், ஹான் ஹை பிரிசிஷன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், லிங்கி ஐடெக், பெகாட்ரான் கார்ப்பரேஷன், தைவான் சர்ஃபேஸ் மவுண்டிங் டெக்னாலஜி மற்றும் ஜென் டிங் டெக்னாலஜி ஹோல்டிங்.
பிற மாநிலங்கள்
கர்நாடகாவில் இரண்டு (விஸ்ட்ரான் கார்ப்பரேஷன், ஷென்சென் யுடோ பேக்கேஜிங் டெக்னாலஜி) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (செங் உஈஐ பிரிசிஷன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம்), மகாராஷ்டிரா (ஜாபில் இன்கார்பரேட்டட்) மற்றும் உத்தரப்பிரதேசத்தில் (சன்வோடா எலக்ட்ரானிக்) ஒவ்வொன்றும் உள்ளன.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications