ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 அறிமுகம் செய்யும் போது இந்நிறுவனத்துடைய முக்கிய இலக்காகக் கூறியது நெட் ஜீரோ எமிஷன் தான். கிரீன் எனர்ஜி, கிளீன் எனர்ஜி போன்றவற்றைக் கூறி தனது ஐபோன் விலையைத் தடாலடியாக உயர்த்தியது. இதன் பின்பு கிரீன் எனர்ஜி கொள்கையைத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ள ஆப்பிள், இந்தியாவில் சோலார் மின்சாரம் உற்பத்திக்காகச் சிறப்புக் கூட்டணியை அமைந்துள்ளது.
கிளீன் எனர்ஜி உற்பத்தியை விரிவுபடுத்தும் நோக்கத்தில் ஆப்பிள் நிறுவனம், இத்துறை நிறுவனமான கிளீன்மேக்ஸ் உடன் இணைந்து 14.4 மெகாவாட் மின்சார திறன் கொண்ட ஆறு ரூஃப் சோலார் மின்சார உற்பத்தி திட்டங்களில் முதலீடு செய்வதாக ஏப்ரல் 17 ஆம் தேதி அறிவித்தது.

இந்த புதிய சோலார் கட்டமைப்புகள், இந்தியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் மும்பை மற்றும் டெல்லியில் தொடங்கப்பட்ட இரண்டு ரீடைல் கடைகளுக்கும் மின்சாரத்தை வழங்கும் என்று அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் தனது உலகளாவிய கார்ப்பரேட் செயல்பாடுகளுக்காக 100 சதவீதம் கிளீன் எனர்ஜி-யில் இயக்கும் இலக்கை 2018 ஆம் ஆண்டிலேயே அடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகள் மற்றும் உற்பத்தி விநியோக சங்கிலி தற்போது 18 கிகாவாட் கிளீன் எனர்ஜி மூலம் இயக்குகிறது, இது 2020 ஆம் ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல் ஆப்பிள் நிறுவனம் தனது கார்ப்பரேட் செயல்பாடுகள் அதிகம் உள்ள இடங்களில் பயன்படுத்தப்படும் குடிநீரை 100 சதவீதம் மீண்டும் நிலத்தில் சேமிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனம் கிளீன் எனர்ஜியை உற்பத்தி செய்ய உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உருவாக்கிய உற்பத்தி கட்டமைப்புகளில் நேரடியாக 1,50,000க்கும் மேற்பட்ட ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அதிக அளவில் ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நிறுவனமாக ஆப்பிள் திகழ்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் உருவாக்கிய 1.5 லட்சம் வேலைவாய்ப்புகளில் பெரும்பாலானவை 19-24 வயதுடைய முதல் தலைமுறை வேலை தேடுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நேரடி வேலைவாய்ப்புகளைத் தாண்டி 3 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் கேமராக்களுக்கான துணை பாகங்களை (sub-components) உற்பத்தி செய்ய முன்னணி நிறுவனங்களான முருகப்பா குழுமம் மற்றும் டாடா குழுமத்தின் டைட்டன் கம்பெனி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியானது.
இந்த பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால், சீனாவிலிருந்து தனது உற்பத்தி செயல்பாடுகளை இந்தியாவுக்கு மாற்றுவதற்கான ஆப்பிளின் முயற்சியில் இது ஒரு மைல் கல் ஆக இருக்கும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலைகள் இருந்தாலும், கேமராக்கள் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் இன்னும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
ஆப்பிள் ஐபோன்-களின் தனிச்சிறப்பான அம்சங்களில் ஒன்றான கேமரா, தற்போது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று எனத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications