APPLE: இனி கிட்டகூட யாரும் நெருங்க முடியாது.. வரலாற்று சாதனை..!

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஐபோன் 13 சிரியஸ் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் பல விதமாக விமர்சனங்களைச் சம்பாதித்தாலும் விற்பனையில் அசத்தி வருகிறது.

இதேவேளையில் ஆப்பிள் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் பொருட்டு ஆட்டோமேட்டெட் கார்ஸ் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி துறையில் தொடர்ந்து முதலீடு செய்து ஆய்வில் ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில் புத்தாண்டின் முதல் வர்த்தக நாளில் ஆப்பிள் நிறுவனம் மீதான முதலீடுகள் அதிகரித்து யாரும் எதிர்பார்க்காத வரலாற்று உயர்வை டிம் குக் தலைமையிலான ஆப்பிள் பதிவு செய்துள்ளது.

 முதல் வர்த்தக நாள்

முதல் வர்த்தக நாள்

2022ஆம் ஆண்டின் முதல் வர்த்தக நாளில் அமெரிக்க முதலீட்டாளர்கள் வழக்கம் போல் அதிகப்படியான முதலீட்டை டெக் நிறுவனத்தின் மீது முதலீடு செய்த காரணத்தால் ஆப்பிள் பங்குகள் 182.88 டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதன் வாயிலாக ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 3 டிரில்லியன் டாலர் என்ற வரலாற்று உயர்வை உலகிலேயே முதல் நிறுவனமாக அடைந்துள்ளது.

 3 டிரில்லியன் டாலர்

3 டிரில்லியன் டாலர்

ஆனால் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் ஆப்பிள் பங்குகளின் விலை 182.01 டாலர் வரையில் சரிந்து சந்தை மதிப்பீட்டின் அளவு 2.99 டிரில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. இந்தப் புதிய உச்சத்தின் மூலம் உலகின் மிகவும் மதிப்புதக்க நிறுவனங்கள் பட்டியில் ஆப்பிள் நிறுவனம் இருக்கும் முதல் இடத்தை இன்னும் உறுதியாகப் பிடித்துக்கொண்டு உள்ளது.

 ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் தனது 2.5 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை சத்ய நாடெல்லா தலைமை வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பங்குபோட்ட நிலையில் தற்போது 3 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்று மீண்டும் சிங்கம் சிங்ளா தான் இருக்கும் என்பதைக் காட்டியுள்ளது.

 45வது ஆண்டு

45வது ஆண்டு

இதைத் தொடர்ந்து சவுதி ஆரம்கோ 1.9 டிரில்லியன் டாலரும், ஆல்பபெட், அமேசான், டெஸ்லா ஆகியவை 1 டிரில்லியன் டாலர் அளவீட்டையும் தொட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஜனவரி 3, 1977ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, சரியாக 45வது ஆண்டில் ஆப்பிள் 3 டிரில்லியன் டாவர் சந்தை மதிப்பீட்டை அடைந்துள்ளது.

 ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் நிறுவனம் என்றாலே நாம் அனைவரின் நினைவிற்கு வருவது ஸ்டீவ் ஜாப்ஸ் தான், ஸ்மார்ட்போன் என்றால் என்ன என்று தெரியாத காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு முதல் ஐபோனை 2007ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். அன்று முதல் இன்று வரையில் ஆப்பிள் பங்குகள் சுமார் 5,800 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+