ஆப்பிள் போன்கள் என்றாலே அவை உயர் ரக ஸ்மார்ட்போன்கள் தான் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிய குறைந்த விலை மாடலான ஐபோன் SE-இன் மேம்படுத்தப்பட்ட மாடலை தயாரிக்க உள்ளதாகவும் அதோடு புதிய ஐபேட் மாடல்களையும் தயாரிக்க இருப்பதாகவும் ப்ளூம்பெர்க் நியூஸ் கடந்த திங்கட்கிழமை அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது ஆப்பிள் பிரியர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை வழங்கியுள்ளது. ஆப்பிள் பிராண்டுகள் பிடித்தும் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக அவற்றை வாங்க இயலாமல் இருக்கும் நபர்களுக்கு, இந்த போன்கள் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த புதுப்பிக்கப்பட்ட குறைந்த விலையிலான ஆப்பிள் போன்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐபோன் SE மாடல் நிறுவனத்திற்கு நடுத்தர ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங், ஜியோமி மற்றும் பிற ஸ்மார்ட்போன் பிராண்டுகளுடன் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஐபோன் SE பொதுவாக ஐபோன் தொடரில் மிக மலிவான மாடலாகக் கருதப்படுகிறது. இதன் விலை $429 முதல் தொடங்குகிறது.
J607 மற்றும் J637 என்ற குறியீட்டைக் கொண்டிருக்கும் புதிய ஐபாட் ஏர் மாடல்கள் போன்றவற்றை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று அறிக்கை கூறுகிறது, மேலும் நிறுவனம் தனது மேஜிக் கீபோர்டு ஆப்ஷனை புதுப்பிக்கவும் தயாராகி வருகிறது. R307 மற்றும் R308 என்ற குறியீட்டைக் கொண்டிருக்கும், புதிய ஏர் மாடல்களின் 11-இன்ச் மற்றும் 13-இன்ச் பதிப்புகளையும் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் தொடக்கத்தில், ஆப்பிள் நிறுவனம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 16 மாடல்களை அறிமுகப்படுத்தியது. AI தொழில்நுட்பம் பல இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஐபோன் 16 மாடல்களிலும் கேமரா மூலம் எடுக்கப்பட்ட பொருட்களை புரிந்து கொள்வது, அடையாளம் காண்பது போன்ற அம்சங்களையும் இந்த ஐபோன் 16 மாடல் கொண்டுள்ளது.
தற்போது சாம்சங் சியோமி போன்ற பிராண்டுகள் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரையிலான நடுத்தர ஸ்மார்ட் போன் வகைகளை அறிமுகம் செய்துள்ளன. இவற்றோடு தற்போது புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் மக்களின் அலை ஐபோன் பக்கம் திரும்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications