இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் வர்த்தகத்தை நடத்தி வருவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
டெஸ்லா முதல் அமேசான் வரை, சேல்ஸ்போர்ஸ் முதல் பைஜூஸ் வரையில் பணப் பலம் கொண்ட பெரும்பாலான டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கத்தை அறிவித்து வருகிறது
இதே வேளையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை ஒவ்வொரு வருடமும் உருவாக்கி வரும் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் இதுவரையில் முன்லைட்டிங் பிரச்சனை தவிர வேறு எதற்காகவும் பணிநீக்கம் செய்யாமல் உள்ளது.
டிசிஎஸ்
நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஊழியர்களைக் கொண்டு இயங்கும் டிசிஎஸ் அனைத்து டெக் ஊழியர்களையும் மகிழ்விக்கும் வகையில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்கா
இந்தியாவில் இருக்கும் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவில் அதிகப்படியான வர்த்தகத்தைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனம் தனது அமெரிக்க வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் மேம்படுத்துவதற்காகவும் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 1200 ஊழியர்களைப் புதிதாகப் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
பணிநீக்கம்
அமெரிக்காவில் மைக்ரோசாப்ட், டிவிட்டர், மெட்டா, அமேசான் எனப் பல முன்னணி டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், டிசிஎஸ் அறிவிப்பு மூலம் ஹெச்1பி விசாவில் இருக்கும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் பெரிய அளவில் பயன்படும்.
1200 வேலைவாய்ப்புகள்
ஆனால் டிசிஎஸ் 1200 வேலைவாய்ப்புகள் முழுவதும் ஹெச்1பி விசா ஊழியர்களுக்குக் கட்டாயம் கிடைக்காது என்றாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதேவேளையில் அமெரிக்கக் கல்லூரியில் இருந்து நேரடியாக மாணவர்களைத் தேர்வு செய்து பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது. டிசிஎஸ் இந்த 1200 வேலைவாய்ப்புகளை இல்லினாய்ஸ் மாநிலத்தில் அளிக்க உள்ளது.
இல்லினாய்ஸ் அலுவலகம்
டிசிஎஸ் நிறுவனத்தின் இல்லினாய்ஸ் அலுவலகத்தில் தற்போது 3000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள், இதில் 1100 பேரை கடந்த 5 வருடத்தில் சேர்க்கப்பட்டவர்கள். கடந்த 5 வருடத்தில் டிசிஎஸ் சுமார் 512 பட்டதாரிகளை நேரடியாகக் கல்லூரியில் இருந்து பணியில் சேர்த்துள்ளது.
30 அலுவலகம்
அமெரிக்காவில் டிசிஎஸ் சுமார் 30 அலுவலகத்தை வைத்துள்ளது, இதில் இல்லினாய்ஸ் மாகாணத்தின் Naperville பகுதியில் பெரிய அலுவலகத்தை வைத்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம் இந்தியர்களுக்கு அமெரிக்காவில் சென்று பணியாற்றும் வாய்ப்புகள் கூடுதலாகக் கிடைக்க உள்ளது.
50 வருடங்கள்
டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்காவில் சுமார் 50 வருடங்களாக வர்த்தகம் செய்து வருகிறது, பார்சூன் 500 நிறுவனத்தில் கிட்டத்தட்ட பாதிக்கும் அதிகமான நிறுவனங்களுடன் டிசிஎஸ் பணியாற்றி வருகிறது. டிசிஎஸ் அமெரிக்கா நிறுவனங்களுக்கு அதிகப்படியான டிஜிட்டல் சேவையை அளித்து, அவர்களின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பெரிய அளவில் உதவுகிறது.
டிசிஎஸ் பங்குகள்
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டிசிஎஸ் நிறுவன பங்குகள் 3.41 சதவீதம் அதிகரித்து 3,315.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் டிசிஎஸ் பங்குகள் 6.82 சதவீதம் அதிகரித்தும், 6 மாதத்தில் 2.93 சதவீதம் சரிந்தும், 2022ல் 13.17 சதவீதம் சரிந்தும் உள்ளது.
More From GoodReturns

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications