சென்னை: ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் கும் இந்தியாவில், மும்பை, டெல்லியில் திறந்தது போல மேலும் 4 சொந்த விற்பனை நிலையங்களை திறக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் ஒரு கடை சென்னையில் அமையலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டு தங்களுடைய நேரடி விற்பனை நிலையங்களை திறந்தது. டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் திறக்கப்பட்ட இந்த நேரடி விற்பனை நிலையங்கள் மூலம் ஆப்பிள் நிறுவனம் பெருமளவிலான வருமானத்தை ஈட்டி உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் தங்களுடைய வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு மேலும் நான்கு சொந்த விற்பனை நிலையங்களை திறக்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 94.9 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், இதுவரை இல்லாத ரெக்கார்ட் என கூறியுள்ளார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 6 சதவீதம் அதிகம் என தெரிகிறது.
குறிப்பாக ஐபோன் விற்பனை முன்பை விட பல மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் ஆப்பிள் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட சொந்த விற்பனை நிலையங்கள் என கூறியுள்ளார்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்கிறது அது எங்களை இன்னும் ஊக்குவிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமின்றி மெக்சிகோ, பிரேசில், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில் இரண்டு இலக்க வளர்ச்சியை தங்களுடைய நிறுவனம் பெற்றுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பையில் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர் இந்திய வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை கவனத்தில் கொண்டு கூடுதலாக இன்னும் நான்கு சொந்த விற்பனை நிலையங்களை திறக்க இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நேரடி விற்பனை நிலையங்களை திறந்தது மட்டுமில்லாமல் தங்களுடைய ஐபோன் உற்பத்தியும் இந்தியாவில் அதிகப்படுத்தி உள்ளது.
அண்மையில் வெளியான ஒரு தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவன பொருட்களின் மதிப்பு 50,000 கோடியை கடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட அதிகம் எனக் கூறப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஐபோன்கள் ஏற்றுமதி 6.27 பில்லியன் டாலர்களாக இருந்தது இது 2023-24ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர்களாக அதிகரித்தது. நடப்பாண்டில் முதல் ஆறு மாதங்களிலேயே இது 6 டாலர்களை கடந்து விட்டது.
Story Written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications