இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நகரங்களின் பட்டியலில் சென்னை முன்னிலையில் இருக்கிறது. அண்மையில் கூட ரியல் எஸ்டேட் விற்பனையில் மற்ற நகரங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கும் நிலையில் சென்னை மட்டுமே வளர்ச்சியை எட்டி இருப்பதாக ஒரு அறிக்கை வெளியானது.
இதற்கு முக்கிய காரணம் சென்னையில் பல்வேறு நிறுவனங்களின் ஐடி அலுவலகங்கள் மற்றும் ஜிசிசி மையங்கள் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வேலை வாய்ப்புகள் பெறுகின்றன, எனவே வேலைவாய்ப்பு பெருகுவதற்கு ஏற்ப மற்ற துறைகளும் நல்ல வளர்ச்சியை காட்டி வருகின்றன. சென்னையின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு மகுடம் சூடக் கூடிய வகையில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

உலகின் முன்னணி ஸ்மார்ட் போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள் தன்னுடைய நேரடி அலுவலகத்தை சென்னையில் திறக்க இருக்கிறதாம். அதாவது தன்னுடைய ஜிசிசி மையம் எனப்படும் திறன் மேம்பாட்டு அலுவலகத்தை சென்னையில் அமைக்க ஆப்பிள் நிறுவனம் இடத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்கள் பெரும்பாலும் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் இருக்கக்கூடிய ஃபாக்ஸ்கான் ஆலையிலும் ஓசூரில் இருக்கக்கூடிய டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையிலும் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு நற்செய்தியாக ஆப்பிள் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் சென்னையில் நிறுவப்பட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
சென்னை போரூரில் உள்ள டிஎல்எஃப் ஐடி பூங்காவில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 20,000 சதுர அடி பரப்பளவிலான அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறதாம். இங்கே தான் ஆப்பிளின் gcc மையம் அமைக்கப்படும் என சொல்லப்படுகிறது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய அலுவலகத்தை நிறுவியிருக்கிறது. அடுத்ததாக தற்போது சென்னைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் உலகளாவிய தொழில்நுட்ப மையங்களின் விருப்பமான தேர்வாக சென்னை மாறி வருவது உறுதியாகியிருக்கிறது.
போரூர் டிஎல்எஃப்-இல் ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களின் ஐடி நிறுவனங்களும் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. தற்போது ஆப்பிள் நிறுவனமும் இங்கே தன்னுடைய அலுவலகத்தை நிறுவ உள்ளது. இது மேற்கொண்டு இங்கே வேலைவாய்ப்புகளை பெருக செய்யும்.
ஆப்பிள் நிறுவனத்தின் வருகையை அடுத்து பல்வேறு நிறுவனங்களும் சென்னையை நோக்கி வரும். இது வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும். போரூரில் விரைவில் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்க இருக்கிறது. இது தவிர விமான நிலையமும் அருகிலேயே இருப்பதால் இந்த இடத்தை ஆப்பிள் தேர்வு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications