இந்தியர்களுக்கு ஐபோன் விற்றுத்தள்ளும் ஆப்பிள்.. அடுத்த கடை திறப்பு.. அதுவும் இந்த ஏரியாவில்..!!

மும்பை: இந்தியாவில் ஐபோன் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய நான்காவது நேரடி விற்பனை நிலையத்தை நிறுவ இருக்கிறது. இந்திய சந்தையில் ஐபோன்கள் விற்பனை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனையில் ஐபோன்களின் விற்பனை 1 சதவீதமாகவே இருந்தது அது கடந்த ஆண்டு சுமார் 7 சதவீதம் என உயர்ந்திருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய நேரடி விற்பனை நிலையங்களை அமைத்ததும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை தொடங்கியதுமே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் மூன்று இடங்களில் நேரடி ஐபோன் விற்பனை நிலையங்களை நிறுவி இருக்கிறது. மும்பை, டெல்லி, பெங்களூரை தொடர்ந்து நான்காவது விற்பனை நிலையத்தை அமைக்கும் பணிகளை ஆப்பிள் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தியர்களுக்கு ஐபோன் விற்றுத்தள்ளும் ஆப்பிள்.. அடுத்த கடை திறப்பு.. அதுவும் இந்த ஏரியாவில்..!!

CRE Matrix வெளியிட்டுள்ள தகவலின் படி ஆப்பிள் இந்தியா நிறுவனம் மும்பையின் போரிவாலி பகுதியில் தன்னுடைய நான்காவது நேரடி விற்பனை நிலையத்தை அமைக்க இருக்கிறது, இதற்காக ஸ்கை சிட்டி மாலில் 12,616 சதுர அடி பரப்பளவிலான கடையை குத்தகைக்கு எடுத்திருக்கிறதாம். இது தொடர்பாக கையெழுத்தாகியுள்ள வாடகை ஒப்பந்தம் குறித்த விவரங்களும் வெளிவந்திருக்கிறது . கடந்த மே 8ஆம் தேதி முதல் 11 ஆண்டுகளுக்கு இந்த வாடகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த கடைக்காக ஆப்பிள் நிறுவனம் மாதம் தோறும் 17.35 லட்சம் வாடகையாக செலுத்த இருக்கிறதாம், அதாவது ஒரு சதுர அடிக்கு 138 ரூபாய் என வாடகை செலுத்த இருப்பது தெரிய வருகிறது. ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இந்த வாடகையின் மதிப்பானது 15 சதவீதம் அதிகரிக்கும் என அந்த வாடகை ஒப்பந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கடைக்காக ஆப்பிள் நிறுவனம் ஒரு கோடி ரூபாயை டெபாசிட் தொகையாக வழங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

மேலும் தங்களுடைய இந்த கடையின் வருமானத்தில் இரண்டு சதவீதம் தொகையை கடை உரிமையாளருக்கு வழங்குவது எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மும்பையில் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய நேரடி விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறது. ஜியோ வேர்ல்டு கட்டிடத்தில் தான் ஆப்பிளின் முதல் நேரடி விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு இந்த கடை திறக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதை அடுத்து மும்பையில் இரண்டாவது நேரடி விற்பனை நிலையத்தை தொடங்குகிறது.

மும்பை மட்டும் இல்லாமல் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் டெல்லியில் சிட்டி வாக் மால், பெங்களூருவின் பீனிக்ஸ் மால் ஆகிய இடங்களில் நேரடி விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது. பெங்களூருவில் இருக்கக்கூடிய நேரடி விற்பனை நிலையத்திற்கு ஆப்பிள் நிறுவனம் மாதம் தோறும் 17.44 லட்சம் ரூபாயை வாடகையாக செலுத்தி வருகிறது.உலக அளவில் பார்க்கும்போது அமெரிக்கா ,சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக ஆப்பிளின் நான்காவது பெரிய சந்தையாக இந்தியா மாறி இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+