உலகிலேயே மிகப்பெரிய டெக் நிறுவனமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்த சில வருடங்களாக அதிகப்படியான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது, குறிப்பாக ஆப்பிள் ஐபோன்களில் வியப்பு அளிக்கும் வகையில் எவ்விதமான புதுமைகளும் இல்லை என்பது முதல் ஆப்பிள் போன்களுக்கு இணையாக பல போன்கள் சந்தையில் வந்திருக்கும் வேளையில் எதற்காக அதிகப்படியான தொகையை செலுத்த வேண்டும் என பல்வேறு விமர்சனங்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் Wonderlust நிகழ்ச்சியில் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது, இதில் ப்ரோ மாடல் போன்கள் டைட்டானியம் உலோகத்தால் செய்யப்பட்ட நிலையில் 100 டாலர் அதிக தொகைக்கு விற்பனைக்கு வந்தது. ஆனால் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 ப்ளஸ் மாடல் போன்கள் விலை பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டது.

ஆப்பிள் நிறுவனத்தின் Wonderlust நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட போன்கள் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்டதாகவும், 2030-க்குள் நெட் ஜீரோ இலக்கை ஒரு நிறுவனமாக அடைய உள்ளதாகவும், ஐபோன் பேட்டரியில் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட கோபால்ட் தயாரிக்கப்பட்டதாகவும், இதேபோல் அலுமினியம் போன்ற பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக பெருமை பேசியது.
இது மட்டும் அல்லாமல் அடுத்த ஆண்டு முதல் ஆப்பிள் பேகேஜ்-ல் எவ்விதமான பிளாஸ்டிக்கும் இருக்காது என அறிவித்துள்ளது. மேலும் இந்த விஷயங்களை மக்களுக்கு பெரிய சாதனையாக காட்ட வேண்டும் என்பதற்காக ஆஸ்கர் விருது பெற்ற Octavia Spencer-ஐ வைத்து தனி வீடியோ செய்யப்பட்டது.
ஆனால் அதன் பின்பு ஆப்பிள் நிகழ்ச்சியில் அனைத்து விருந்தினர்களுக்கும் பிளாஸ்டிக் கவரில் பேக் செய்யப்பட்ட பிஸ்கட் கொடுக்கப்பட்டது, இதேபோல் இந்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட யோகா மேட் பலவும் பிளாஸ்டிக் பொருட்களால் நிறைந்து இருந்தது இந்த ஒரு போட்டோ மூலமே தெரிகிறது.
இதற்கு ஆப்பிள்-ஐ கடுமையாக விமர்சனம் செய்தும் கிண்டல் செய்தும் பலர் பதிவிட்டு இருந்தனர். இதனால் ஆப்பிள் சொல்வது ஒன்னு, செய்வது ஒன்னு என்று விமர்சனம் எழுந்துள்ளது. இதை நீங்க எப்படி பார்க்குறீங்க.. கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications