ஸ்மார்ட்போன், கம்பியூட்டர், டிஜிட்டல் உலகை தலைகீழாக புரட்டிப்போட்ட ஆப்பிள் நிறுவனம் 2026 ஏப்ரல் 1ஆம் தேதி அன்று தனது 50வது ஆண்டு நிறைவை கொண்டாட உள்ள நிலையில், உலகம் முழுவதும் இருக்கும் ஆப்பிள் பிராண்டு பிரியர்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்தும், ஆப்பிள் நிறுவனத்தின் துவக்க நாட்கள் குறித்த தகவல்களை இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
ஆப்பிள் வெறுமென ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் நிறுவனமில்லை, ஒரு பெரும் டிஜிட்டல் புரட்சிக்கு வித்திட்ட ஒரு நிறுவனம். கம்பியூட்டர் நிறுவனத்தில் மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்ற நிலையை அடைத்து பர்சனல் கம்பியூட்டர் என்பதை மக்களுக்கு எளிதாக கொண்டு சேர்த்த நிறுவனம் ஆப்பிள். இதை தொடர்ந்து ஐபாட், ஐபோன் என பல விஷயங்களை மக்களுக்கு முதல் முறையாக அறிமுகம் செய்த பெருமை ஆப்பிள்-க்கு உள்ளது.

இந்த நிலையில் RR Auctions என்ற ஒரு நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் துவக்க நாட்களில் பயன்படுத்திய அரிய பொருட்கள் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் தொடர்பான 200-க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்தது.
ஸ்டீவ் ஜாப்ஸ் பல டெக் வல்லுனர்களுக்கும் இன்ஸ்பிரேஷன் என்பதால் ஆப்பிள் நிறுவனம், ஸ்டீவ் ஜாப்ஸ் தொடர்பான பொருட்கள் சந்தையில் பெரிய டிமாண்ட் கொண்டுள்ளது. இந்த ஏலம் ஏற்கனவே உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள காரணத்தால் பல பொருட்கள் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏலத்தில் கவனத்தை ஈர்த்த பொருட்கள்:
மார்ச் 16, 1976 தேதி கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் 1 என சிரியல் நம்பர் கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் இருவரும் கையெழுத்திட்ட முதல் செக் ஏலத்திற்கு வந்துள்ளது. வெறும் 500 டாலர் மதிப்புள்ள இந்த செக் ஆப்பிள்-1 சர்க்யூட் போர்டு வடிவமைப்பாளரான ஹாவர்ட் கான்டினுக்கு வழங்கப்பட்டது. இது 500,000 டாலர் கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள வேளையில் இந்த செக் 236,832 டாலருக்கு பிட்டிங் செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கும் போது தனது கேரேஜ்-ல் பயன்படுத்திய மேஜை இந்த ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த மேஜை உடன் ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கும் புகைப்படும் மிகவும் பிரபலம். இந்த மேஜை ஸ்வீவ் ஜாப்ஸ்-ன் சகோதரர் ஜான் சோவனெக் கலெக்ஷனில் இருந்து இந்த ஏலத்திற்கு வந்துள்ளது. சுமார் 25,000 டாலர் மதிப்பீட்டை பெற்ற இந்த டேபிள் தற்போது 59,268 டாலருக்கு மேல் பிட்டிங் செய்யப்பட்டு வருகிறது.
இப்படி ஆப்பிளின் முதல் நிதி அறிக்கை, ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் புரோட்டோடைப், என பல பொருட்கள் ஏலத்திற்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications