ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் WWDC வழக்கம் போல் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் துவங்கியது, கடந்த சில ஆண்டுகளாக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஆப்பிள் இந்த வருடம் தொழில்நுட்பத்தின் புதிய பரிமானத்தை காட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளது என்றால் மிகையில்லை.
ஆப்பிள் WWDC கூட்டத்தில் ஆகுமென்டெட் ரியாலிட்டியில் இயங்கும் ஒரு ஸ்பேஷியல் கம்பியூட்டரை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. பல நிறுவனங்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி, மெட்டாவெர்ஸ் என சாமானிய மக்களையும் நிஜ உலகில் இருந்து தூரப்படுத்தும் பல தொழில்நுட்பத்தில் பணியாற்றி வரும் போதும் ஆப்பிள் மக்களை டிஜிட்டல் உலகுடன் இன்னும் நெருக்கமாக இணைக்கும் ஒரு குறுவியை அறிமுகம் செய்துள்ளது.

Apple Vision Pro குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ளும் முன் முதல் இரண்டு முக்கியமான விஷயத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும், ஆகுமென்டெட் ரியாலிட்டி என்றால் நிஜ உலகில் நிஜ திரை எதும் இல்லாமல் உங்கள் கண்களுக்கு மட்டும் ஒரு டிஜிட்டல் திரை காட்டப்படும், அதில் உங்களுக்கு தேவையானவற்றை பயன்படுத்தலாம்.
மற்றொன்று Spatial computing, மேலே கூறப்பட்ட ஆகுமென்ட் ரியாலிட்டி திரையை தலை அசைவு, கை அசைவு, வாய்ஸ் கமெண்ட் ஆகியவற்றின் மூலம் இயங்கும் தொழில்நுட்பம். ஆகுமென்டெட் ரியாலிட்டி மற்றும் Spatial computing இணையும் ஒரு கருவி தான் WWDC-யில் அறிமுகம் செய்யப்பட்ட Apple Vision Pro.
ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்
Apple Vision Pro கருவி என்பது ஒரு ஹெட் செட் போன்றது, இதை வைத்துக்கொண்டு ஒரு கம்பியூட்டர் ஸ்கிரீனில் செய்யும் அனைத்தையும் ஹெட்செட் வாயிலாக செய்ய முடியும். இது மட்டும் அல்லாமல் படத்தை 250 இன்ச் ஸ்கிரீன் சைஸ்-ல் படுத்துக்கொண்டே ஜாலியாக பார்க்க முடியும். அனைத்தையும் விட இந்த கருவியை கை அசைவு, கண்கள், வாய்ஸ் வாயிலாக கட்டுப்படுத்த முடியும்.
அட ஷாப்பிங், டிசைன், கேமிங், வீடியோ கால், கான்பிரென்ஸ் கால் இந்த VR headset வாயிலாக செய்ய முடியும்.
அனைத்தையும் விட முக்கியமாக Apple Vision Pro -வில் 3டி கேமரா உள்ளது, இதை வைத்து நீங்கள் சேமிக்க வேண்டிய முக்கியமான தருணத்தை 3டி முறையில் படம் பிடிக்க முடியும். இது மட்டும் அல்லாமல் பின் நாளில் இதை பார்க்க வேண்டுமாயின் இதை 3டி முறையில் பார்க்க முடியும். இதனால் நிஜத்தில் நடப்பது போலவே இருக்கும்.
இந்த புரட்சிகரமான கருவி சுமார் 3499 டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டதட்ட 2,90,000 ரூபாய். இப்போது டிவி கூட 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இது செம வொர்த்.


Click it and Unblock the Notifications