அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில் அடுத்தடுத்து நிறுவனங்கள் சீனா மற்றும் வியட்நாம் நாட்டில் இருந்து தனது உற்பத்தி தளங்களை இந்தியாவுக்கு மாற்ற துவங்கியுள்ளது. இதன் மூலம் டிரம்ப் - ஜி ஜின்பிங் மத்தியிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், முதலும் முக்கியமான நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் உள்ளது.
ஆப்பிள் நிறுவனம், இனி தனது அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக புதிய அறிவிப்பு வந்துள்ளது. பைனான்சியல் டைம்ஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆப்பிள் அடுத்த ஆண்டுக்குள் அமெரிக்காவில் விற்கப்படும் அனைத்து iPhone களின் உற்பத்தியையும் இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்த முக்கிய மாற்றம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருட்களுக்கு விதித்துள்ள ரெசிப்ரோக்கல் வரி காரணமாக எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனம் இனி எந்த காரணத்திற்காகவும் சீனாவைத் தனது சப்ளை செயினில் நம்பியிருக்கக் கூடாது என முடிவு செய்து தனது உற்பத்தி தளத்தை மொத்தமாக எவ்வளவு பிரச்சனை, தாமதம் வந்தாலும் சரி இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் மாற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளது.
தற்போது சீனாவில் தான் ஆப்பிளின் பெரும்பாலான உற்பத்தி தளங்கள் உள்ளது. சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் சீன மற்றும் அமெரிக்கச் சந்தையில் விற்கப்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்காவில் விற்கப்படும் அனைத்து ஆப்பிள் பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கப்பட வேண்டும் என்பது தான் தற்போதைய ஆப்பிளின் திட்டம்.
இந்த திட்டம் வெற்றி பெறினால், 2026-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆண்டுக்கு 60 மில்லியனுக்கும் மேற்பட்ட ஐபோன்-கள் தயாரிக்கப்படலாம். இது தற்போதைய உற்பத்தி அளவை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான பொருட்கள் சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான், பெகாட்கான் மற்றும் ஓசூரில் இருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, ஆப்பிள் நிறுவனத்திற்கு மிக முக்கியமான சந்தையாக உள்ளது எனவே இச்சந்தையை டிரம்ப்-ன் வரி காரணத்தால் இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதேவேளையில் இந்தியா - அமெரிக்கா மத்தியிலான நட்புறவு மிகவும் சிறப்பாக உள்ளது என்பதால் டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பில் இருந்து இந்தியா பெரிய அளவிலான சலுகையைப் பெறும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
IDC வெளியிட்ட 2024-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, ஆப்பிளின் உலகளவிலான ஐபோன் ஷிப்மெட்டில் சுமார் 28% அமெரிக்காவைச் சேர்ந்தவை. சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் iPhone உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றுவது, ஆப்பிளுக்குப் பெரிய வரிகளைத் தவிர்க்க உதவும்.

மேலும், அமெரிக்கா-சீனா இடையிலான அரசியல் பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய நீண்ட கால ஆபத்தையும் குறைக்கும். அமெரிக்கா இன்று சீனாவுடன் தற்போதைய பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்வதற்காக வரி விதிப்பில் தளர்வுகளை அளித்தாலும், இது மீண்டும் இரு நாடுகளுக்கு மத்தியில் வெடிக்கும் முக்கிய பிரச்சனையாகவே உள்ளது.
டிரம்ப் அரசு சீனாவிடம் இருந்து வரும் பொருட்களுக்கு 145% வரையிலான அடிப்படை வரியை விதித்துள்ளது. இந்த வரி சில பொருட்களுக்கு 245 சதவீதம் வரையில் விதிக்கப்படுகிறது. தற்போது ஸ்மார்ட்போன்களுக்கு 20% வரி உள்ளது, சமீபத்தில் டிரம்ப் அரசு பல மின்னணு பொருட்களுக்கு இந்த வரி நீக்கப்பட்டாலும், அது தற்காலிகமாகவே இருக்கும் என தெரிகிறது. இதன் வாயிலாகவே ஆப்பிள் சாம்சங் தற்போது தனது உற்பத்தி தளத்தை சீனாவில் இருந்தும் வியட்நாம் நாட்டில் இருந்தும் இந்தியாவுக்கு மாற்றுகிறது.
ஆப்பிள் எடுத்த முடிவு இந்தியாவுக்குப் பெரிய அளவிலான வாய்ப்புகளைத் தரும். ஆப்பிள் பொருட்கள் உற்பத்திக்கா பல புதிய சப்ளையர்கள் இந்தியாவில் முதலீடு செய்வார்கள், இதேபோல் ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலை கட்டமைப்பு அனைத்தும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படலாம். அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டுக்கு இது மாபெரும் ஜாக்பாட்.
சீனா மற்றும் வியட்நாம் நாட்டில் இருந்து வரும் புதிய முதலீடுகள் மற்றும் புதிய சப்ளையர்கள் மூலம் தமிழ்நாட்டில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகலாம், குறிப்பாகத் தமிழ்நாடு டெக்னாலஜி துறைக்கு இது பொற்காலம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications