ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் கான்பரென்ஸ் திங்கட்கிழமை நடந்து முடிந்த நிலையில், பல வருடங்களுக்கு பின்பு ஆப்பிள் நிறுவனம் டெக் வல்லுனர்களுக்கு தீணிப்போட்டு உள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்கு பின்பு ஆப்பிள் எவ்விதமான புரட்சிகரமான கருவிகளையோ, தொழில்நுட்பத்தையோ வெளியிடவில்லை என்பது நீண்ட காலமாக இருந்த ஒரு கருத்து. இதை டிம் குக் WWDC 2023 கூட்டத்தின் மூலம் மாற்றியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் தனது கருவிகளில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதாக கூறிவிட்டு, கேமரா, சிப், ஸ்கிரீன் போன்றவற்றில் சிறிய மாற்றங்கள் அல்லது மேம்பாடுகளை செய்துவிட்டு வெளியிடும். ஆனால் WWDC 2023 கூட்டம் அப்படியில்லை, பலமுக்கியமான மாற்றங்களை தொழில்நுட்ப அளவில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஆப்பிள்.

முதல் டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர், முதல் ஸ்மார்ட்போன் இப்படி டிஜிட்டல் உலகில் பல புரட்சிகளை செய்த ஆப்பிள் WWDC 2023 கூட்டத்தில் அனைத்து தரப்பினரையும் வியக்க வைக்கும் வகையில் Vision pro என்ற புதிய AR headset அறிமுகம் செய்து டிஜிட்டல் உலகிற்கும், நிஜ உலகிற்கும் உண்டான இடைவெளியை குறைத்துள்ளது.
WWDC 2023 கூட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் Vision pro என்ற புதிய AR headset மட்டும் அல்லாமல் புதிதாக 15 இன்ச் மேக்புக் ஏர், மேக் ஸ்டூடியோ, மேக் ப்ரோ ஆகியவற்றை M2 சிப் உடன் அறிமுகம் செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் iOS 17, iPadOS 17, WatchOS 10 ஆகியவற்றில் புதிய சேவைகளையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
Vision pro என்ற புதிய AR headset அறிமுகம் தாண்டி செம கூல் ஆன விஷயம் என பேசப்படும் அளவுக்கு ஆப்பிள் 3 புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் முக்கியமாக ஆப்பிள் கருவிகளில் பேஸ்டைம் கால் செய்யும் போது மிஸ்டு கால் சென்றால் வீடியோ மெசேஜ் அனுப்ப முடியும்.
இதேபோல் சேட் செய்யும் போது நம்முடைய கேலரியில் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டென்ட் முறையில் ஸ்டிக்கர் ஆக மாற்ற முடியும். இது சேட்டிங்-ஐ மேலும் சுவாரஸ்யமாக்கும்.
போன் வரும் போது நாம் அதை எடுக்க விரும்பாவிட்டால் எதிர்முனையில் இருப்பவர் அனுப்பும் வாய்ஸ் மெசேஜ், டெக்ஸ்ட் ஆக நமக்கு ஐபோன் ஸ்கிரீனில் தெரியும்.

இதை தாண்டி macOS 14-ஐ macOS Sonoma என அழைக்கப்படுகிறது, இந்த OSல் ஆப்பிள் டிவி-யில் இருக்கும் அனிமேடெட் ஸ்கிரீன்சேவர் இருக்கும், Safari-யில் ப்ரைவேட் பிரவுசிங் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது, இதில் அனைத்துவிதமான டிராக்கிங்-ம் நீக்கப்பட்டு உள்ளது.
macOS Sonoma-வில் புதிதாக Game Mode கொண்டு வரப்பட்டு உள்ளது, இந்த மோடில் சிபியூ, ஜிபியூ அனைத்தின் திறனும் மேம்படுத்தப்பட்டு அதிகவேக அனுபவத்தை கொடுக்கும். இதேபோல் macOS Sonoma-வில் புதிதாக Mac video conferencing சேவை கொண்டு வரப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications