ஆப்பிள் அறிமுகம் செய்த லிக்விட் கிளாஸ்.. பங்குச்சந்தையில் சோகக்கதை.. என்ன நடந்தது..?

இன்றைய இளைஞர்களின் விருப்பமான ஸ்மார்ட்போன் பிராண்டாக இருக்கும் ஆப்பிளின் அஸ்திவாரமே அதன் வன்பொருள் மற்றும் மென்பொருள் தான், இதன் பின்பு தான் டிசைன், மார்கெட்டிங் அனைத்தும். இந்த நிலையில் திங்கட்கிழமை ஆப்பிள் நிறுவனம் தனது WWDC 2025 மாநாட்டில் iOS 26 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தியது. இதோடு இதர பல முக்கிய அம்சங்களையும் அறிமுகம் செய்தது.

ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று இந்த WWDC மாநாடு. ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் நிறுவனம் இந்த மாநாட்டில், இந்நிறுவனம் தயாரித்துள்ள புதிய சாப்ட்வேர் மற்றும் தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யும். இந்த கூட்டத்தின் பின்பு ஆப்பிள் பங்குகளின் நிலை தான் இக்கூட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.

ஆப்பிள் அறிமுகம் செய்த லிக்விட் கிளாஸ்.. பங்குச்சந்தையில் சோகக்கதை.. என்ன நடந்தது..?

இப்படி இக்கூட்டத்தில் ஆப்பிள் என்னவெல்லாம் அறிவித்தது..? ஆப்பிள் பங்குகளின் நிலைமை என்ன என்பதை முழுமையாக பார்ப்போம்.

ஆப்பிள் இன்டலிஜென்ஸ்: WWDC 2025 மாநாட்டில் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் எனும் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் iPhone, iPad, Mac, Apple Watch மற்றும் Apple Vision Pro ஆகியவற்றின் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என அறிவித்துள்ளது. இந்த அம்சங்கள், ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட மற்றும் புத்திசாலித்தனமான அனுபவங்களை வழங்குவதற்காக, iOS டெவலப்பர்களுக்கு ஆப்பிள் இன்டலிஜென்ஸ் மாடலை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது ஆப்பிள் நிர்வாகம்.

லிக்விட் கிளாஸ்: ஆப்பிள் நிறுவனம் முதன்முறையாக லிக்விட் கிளாஸ் எனும் புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் இன்டர்பேஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இன்டர்பேஸ் iOS 26, iPadOS 26, macOS Tahoe 26, watchOS 26 மற்றும் tvOS 26 ஆகியவற்றில் ஒரே மாதிரியாக செயல்படும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஆப்பிள் அறிமுகம் செய்த லிக்விட் கிளாஸ்.. பங்குச்சந்தையில் சோகக்கதை.. என்ன நடந்தது..?

ஒவ்வொரு ஆப்பிள் ப்ராடெக்ட்-ன் தனித்தன்மையை பாதிக்காமல் இந்த புதிய லிக்விட் கிளாஸ் இன்டர்பேஸ் கொண்டு வரப்பட்டு உள்ளது என ஆப்பிள் மூத்த நிர்வாகி ஆலன் டை இந்த மாநாட்டில் கூறினார். இந்த புதிய இன்டர்பேஸ் மூலம் ஐகான் தவிர அனைத்து வெயிட்ஸ்பேஸ்-ம் கண்ணாடி போல பிரதிபலிக்கும், இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் காண்ணாடி போன்ற தீம்-ஐ ஆப்பிள் உருவாக்கியுள்ளது. ஆனால் இதில் பல நுட்பம் உள்ளது என ஆப்பிள் தரப்பில் அடித்து சொல்லப்படுகிறது.

ஆப்பிள் ஆப்ரேட்டிங் சிஸ்டம் பெயர்: ஆப்பிள் தனது ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு இதுவரையில் பதிப்பு எண்களை பயன்படுத்தி வந்த நிலையில், இதற்கு பதிலாக ஆண்டை பயன்படுத்தி பெயரிடும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, iPhone-க்கான அடுத்த தலைமுறை ஆப்ரேடிங் சிஸ்டம் iOS 26 என அழைக்கப்படும். செப்டம்பர் 16, 2024ல் அறிமுகம் செய்யப்பட ஆப்ரேட்டிங் சிஸ்டம் பெயர் iOS 18. இந்த மாற்றம், ஆப்பிள் தயாரிப்புகளின் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை எளிமையாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் மாற்ற உதவும்.

ஆப்பிள் அறிமுகம் செய்த லிக்விட் கிளாஸ்.. பங்குச்சந்தையில் சோகக்கதை.. என்ன நடந்தது..?

புதிய சேவை: iOS 26-இல் உள்ள மெசேஜஸ் செயலியில், நேரடி மொழிபெயர்ப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது மெசேஜ்-களை தானாகவே மொழிபெயர்க்க உதவுகிறது. மேலும், தொலைபேசி அழைப்புகளின்போது, உரையாடல் முழுவதும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வாசிக்கப்படும். இந்த அம்சம், உலகளாவிய வாடிக்கையாளர்கள் மத்தியிலான நட்புறவை எளிதாக்கும்.

ChatGPT ஒருங்கிணைப்பு: ஆப்பிள், தனது சில செயலிகளில் ChatGPT சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்களுக்கு மேம்பட்ட அனுபவங்களை வழங்கும். இருப்பினும், இந்த அறிவிப்புகள் முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை என்பது தான் சோகமான விஷயம்.

ஆப்பிள் பங்கு விலை: WWDC 2025 மாநாட்டிற்கு பிறகு ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 2% சரிவை சந்தித்தன. நேற்றைய வர்த்தக முடிவில் ஆப்பிள் பங்குகள் 1.21 சதவீதம் சரிந்து 201.45 டாலராக குறைந்தது.

சீனாவில் iPhone விற்பனை குறைவு, AI துறையில் பின்தங்கியது மற்றும் அமெரிக்காவின் வர்த்தக கட்டுப்பாடுகள் என பல முக்கிய பிரச்சனைகளுக்கு மத்தியில் அப்பிள் வியப்பு அளிக்கும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்யாதது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதித்தது என்றால் மிகையில்லை.

Apple பங்கு வரலாறு: ஆப்பிள் நிறுவனம் 1976ல் துவங்கப்பட்டு 1980-ல் 22 டாலர் விலைக்கு ஒரு பங்கை பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்டு அறிமுகமானது, இது நாள் வரையில் நடந்த பங்கு பிரிப்புகளை கணக்கில் கொண்டால் அது வெறும் 0.10 டாலர் மட்டுமே. ஆப்பிள் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் ஸ்டீவ் ஜாப்ஸ் தான், இவரின் மறைவிற்கு பின்பு டிம் குக் தலைமை பொறுப்பை ஏற்றார். ஆனால் திட்டமிட்டப்படி ஆப்பிள் வளர்ச்சி இல்லை. புதுமை இல்லாமல் பெரிய அளவில் அதன் நன்மதிப்பை இழந்துள்ளது. பல நேரத்தில் ஆப்பிள் வாடிக்கையாளர்களே அதன் தயாரிப்புகளை விமர்சனம் செய்துள்ளனர்.

ஆப்பிள் அறிமுகம் செய்த லிக்விட் கிளாஸ்.. பங்குச்சந்தையில் சோகக்கதை.. என்ன நடந்தது..?

ஆனால் ஆப்பிள் அதன் ப்ரைம் காலத்தில் அதிரடி காட்டியது என்றால் மிகையில்லை, 2018-ல் 1 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டிய முதல் அமெரிக்க நிறுவனம் என்ற பெயரை பெற்றது. 2020-ல் 2 டிரில்லியன் டாலரையும், 2023-ல் 3 டிரில்லியன் டாலரையும் தாண்டியது.

2024 டிசம்பரில், ஆப்பிள் பங்கு விலை 260.10 டாலர் என்ற உச்சத்தை எட்டியது. iPhone விற்பனை, ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி+ போன்ற சேவைகள், மற்றும் வலுவான பிராண்ட் மதிப்பு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக இருந்தன. ஆப்பிள், உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக இன்றும் திகழ்ந்தது.

ஆப்பிள் பங்கு விலை கணிப்பு: ஆப்பிள் பங்கு விலை 2025-ல் 237.44 டாலரை ஐ எட்டலாம், இது தற்போதைய விலையில் இருந்து 15.91% உயர்வாகும். ஆப்பிளின் சேவைகள் துறை, ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் டிவி+ ஆகியவை லாபத்தை அதிகரிக்கின்றன. இதன் மூலம் 2030-ல் ஆப்பிள் பங்கு விலை 349.16 டாலராகவும், 2040-ல் 1,221.47 டாலராகவும் உயரலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

ஆப்பிளும் - தமிழ்நாடும்: ஆப்பிள் தனது எதிர்காலத்தை இந்தியாவில் விதைத்ததுள்ளது, 2025-ல் இந்தியாவில் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள iPhone உற்பத்தி செய்யப்பட்டு, உலகளவில் ஒவ்வொரு ஐந்து iPhone-களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படும் வகையில் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் Foxconn, Tata Electronics, Pegatron ஆகியவை ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+