பெங்களூரு: ஆப்பிள் நிறுவனம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 150,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆப்பிளின் நிறுவனம் இப்போது தனது தொழிற்சாலை ஊழியர்களுக்கு வீட்டு வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு ஆப்பிள் அவாஸ் திட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டு டிரெண்டாகியுள்ளது. அதாவது தங்கள் ஊழியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் வீடு கட்டி தர உள்ளது.
சீனா மற்றும் வியட்நாமில் உள்ள இண்டஸ்ட்ரியல் ஹவுஸ்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆப்பிள் அவாஸ் யோஜனா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் பார்ட்னர் நிறுவனங்களான ஃபாக்ஸ்கான், டாடா மற்றும் சால்காம்ப் நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்கள் தங்குவதற்கான ஹவுசிங் காம்பிளெக்ஸ் கட்டித் தருவது பற்றி யோசித்து வருகின்றன.

இந்த திட்டம் இந்தியாவில் தனியார் துறையின் மிகப்பெரிய முன்முயற்சியாகும். இந்தியாவில் இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பார்ட்னெர்ஷிப் மூலம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 78,000 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது, இதில் தமிழகத்தில் மட்டும் 58,000 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதன்படி தமிழகத்தில் கட்டப்பட போகும் வீடுகளின் எண்ணிக்கை இத்திட்டத்தில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ளது.
டாடா குழுமம் மற்றும் SPR இந்தியா, ஸ்டேட் இண்டஸ்ட்ரீஸ் கார்பொரேஷன் ஆப் தமிழ்நாடு (SIPCOT) ஆகியவற்றால் இந்த குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆப்பிள் அவாஸ் யோஜனா திட்ட நிதியில் 10-15% மத்திய அரசிடமிருந்து வரும், மீதமுள்ளவை மாநில அரசுகள் மற்றும் தொழில் முனைவோர்களால் வழங்கப்படும்.
இந்த திட்டத்தினை மார்ச் 31 ஆம் தேதி, 2025 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பெற்று தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவான வீட்டுத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள் தொழிலாளர்களின் செயல்திறனை மேம்படுத்துவதும் பாதுகாப்பை வழங்குவதும் ஆகும், குறிப்பாக 19-24 வயதுடைய புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த முன்முயற்சியானது ஊழியர்களுக்கு வீட்டுவசதி வழங்குவதில் கவனம் செலுத்துகிறது, பணியாளர்கள் பலர் தற்போது வாடகை தங்குமிடங்களில் வசிக்கின்றனர் மற்றும் நீண்ட தூரம் வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த பெரிய ஹௌசிங் திட்டம் பெண் தொழிலார்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. நீண்ட தூரம் வேலைக்கு செல்வதைக் கருத்தில் கொண்டும், அவர்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்களின் செயல்திறன் வெளிப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது.
எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பவர்கள், விரைவான கப்பல் போக்குவரத்து மற்றும் விமான நிலையங்களுக்கு அருகில் இருக்க வேண்டும், அதற்கு தொழிலாளர்களுக்கு நல்ல வீடுகள் தேவை. தொழிலாளர்கள் பொதுவாக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வருகிறார்கள் என்பதால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆப்பிள் அவாஸ் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மெய்ட்டி செக்கிரேட்டரி எஸ். கிருஷ்ணன், தொழிற்சாலைகளுக்கு அருகில் வீடுகள் இருப்பதால் அவர்களின் செயல்திறனை அதிகரிக்க முடியும் என கூறியுள்ளார்.
இந்தியாவில் முக்கிய ஐபோன் சப்ளையர்களான ஃபாக்ஸ்கான், அதன் 41,000 ஊழியர்களுக்கான வீடுகளில், 35,000 வீடுகளை அந்நிறுவனத்தில் பணியாற்றும் 75 சதவீத பெண்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் அவர்களின் செயல்திறன் வெளிப்படும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications